ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

சில நிமிட மௌனத்தைக் கலைக்க விஸ்வா, “நீ சொல்லு”

வனிதா, “என்ன சொல்லறது?”

விஸ்வா, “ஆறு வருஷத்துக்கு முன்னால் … நோ இப்போ ஏழு வருஷம் ஆகப் போகுது … எனக்கு வேலை வாங்கிக் கொடுக்க எப்படி உன்னால் சந்திரசேகருக்கு இணங்க மனம் வந்தது?”

வனிதா, “சொல்லறேன். ஆனா நான் சொல்வதை என் கோணத்தில் நீ யோசிச்சுப் பார்க்கணும் விஸ்வா. செய்வியா?”

விஸ்வா, “எஸ் … Go on”

வனிதா, “முதலில் எட்டு வருஷத்துக்கு முன்னால நடந்ததை சொல்றேன். அதுக்குப் பிறகு ஆறு வருஷத்துக்கு முன்னால் நடந்ததைச் சொல்லறேன்”

விஸ்வா, “ம்ம்ம்”

வனிதா, “நீ அடிபட்டதுக்குப் பிறகு ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிருந்தே. எப்படியாவுது உனக்கு உற்சாகமூட்ட நான் முயற்சி செஞ்சேன். ராமின் உதவியோடு அதில் வெற்றியும் கண்டேன். அது எனக்கு என் மேல் ரொம்ப தன்னம்பிக்கையை கொடுத்தது.”

விஸ்வா, “சோ, நான் ஒண்ணுக்கும் லாயக் கில்லாதவன் உன்னால்தான் எனக்கு தன்னம்பிக்கை வந்ததுன்னு சொல்ல வர்றியா?”

வனிதா, “சத்தியமா இல்லை விஸ்வா. நாட்டுக்காக உயிரைப் பணயம் வைக்கற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்குன்னு எனக்குத் தெரியும். அதை நினைச்சு நான் பெருமைப் படாத நாளே இல்லை. போர் அனுபவத்துக்குப் பிறகு உன் மனநிலை அப்படி இருந்தது. நான் அந்த மாதிரி சிச்சுவேஷனில் செத்தே போயிருப்பேன். ஆனா, காலில் அடி பட்டதனால் அவங்க உனக்கு டெஸ்க் ஜாப் கொடுத்ததால் ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிருந்தே. உன்னை எப்படியாவுது உற்சாகப் படுத்தணும்ன்னு நினைச்சேன். அந்த முயற்சியில் எனக்குக் கிடைச்ச வெற்றி என்னால் எதையும் சாதிக்க முடியுங்கற ஒரு வெற்றுத் தன்னம்பிக்கையை கொடுத்தது.”

விஸ்வா, “சரி, மேல சொல்லு”

வனிதா, “அதுக்கு ரெண்டு வருஷத்துக்குப் பிறகு PMLஇல் அந்த வேலை உனக்குக் கிடைச்சா நிச்சயம் அதில் ஷைன் பண்ணுவேன்னு நினைச்சேன். ஆனா, முதலில் சந்திரசேகர் உன்னை வேலைக்கு எடுப்பதில் என்ன ரிஸ்க் அப்படின்னு அவர் கோணத்தில் சொன்னார். அவர் சொன்னதையும் நான் உன் கிட்டே சொன்னேன். ஞாபகம் இருக்கா?”

விஸ்வா, “எஸ்”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.