ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

டாக்டர் மதுசூதன், “வந்து ரெண்டு நாள் ஆச்சு. வந்த மறு நாள் டாக்டர் அமுதாகிட்டே இருந்து எனக்கு ஒரு S.O.S”

விஸ்வா, “என்ன விஷயம்?”

டாக்டர் மதுசூதன், “இப்போ எங்கே இருக்கே?”

விஸ்வா, “ஆஃபீஸில் … ”

டாக்டர் மதுசூதன், “சாயங்கலம் ஏழு மணிக்கு ஆர்.எஸ்.ஐயில் மீட் பண்ண முடியுமா?”

விஸ்வா, “ஆக்சுவலா நான் குழந்தைகள் கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன்”

டாக்டர் மதுசூதன், “குழந்தைகள் மத்தியானத்தில் இருந்து வீட்டில் தான் இருந்து இருப்பாங்க. நீ ஏன் இன்னும் ஆஃபீஸில் உக்காந்துட்டு இருக்கே?”

விஸ்வா, “அரை மணி நேரத்துக்கு முன்னால் வரை மீட்டிங்க் இருந்தது. வனிதா வீட்டுக்குப் போனா. கொஞ்ச நேரம் கழிச்சு நான் போகலாம்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”

டாக்டர் மதுசூதன், “நீயும் கூடவே போயிருக்கலாமே?”

விஸ்வா, “போயிருக்கலாம். அவ வீட்டுக்குள் நுழைஞ்சதும் குழந்தைகள் ரெண்டும் வனிதா கூடத்தான் இருப்பாங்க. அரை மணி வரை நான் கூப்பிட்டாலும் என் கிட்டே வர மாட்டாங்க” என்று சொல்லச் சொல்ல அவன் குரல் லேசாக உடைந்தது …

டாக்டர் மதுசூதன், “உன் மனசு மேலும் புண் படணும்ன்னு நான் இதைச் சொல்லலை. இருந்தாலும் என்னால் சொல்லாம இருக்க முடியலை. இது நீயா வர வெச்சுட்டது”

விஸ்வா, “I know .. சரி எதுக்கு ஏழு மணிக்கு வரச் சொன்னீங்க?”

டாக்டர் மதுசூதன், “அவசரமா உன் கூட பேசணும். அதுக்குத்தான்”

விஸ்வா, “என்ன விஷயம்?”

டாக்டர் மதுசூதன், “நீ வா. சொல்லறேன்”

விஸ்வா, “ஓ.கே”

~~~~~~~~~~

ஆர்.எஸ்.ஐ மீட்டிங்க் ரூம் ..

டாக்டர் மதுசூதன், “கேஸ் போட்டு ஆறு மாசம் ஆகியும் கவுன்ஸிலிங்க் முடியாததால் கேசை டிஸ்மிஸ் பண்ணப் போறதா டாக்டர் அமுதாகிட்டே ஜட்ஜ் சொல்லி இருக்கார்”
விஸ்வா மௌனம் காக்க டாக்டர் மதுசூதன் தொடர்ந்து, “கடைசியா பேசினப்போ வனிதா தான் குழந்தைகளைப் பிரிஞ்சு இருக்க மாட்டேன் அப்படின்னு மட்டும் அப்ஜெக்ட் பண்ணினா. ஆனா, விவாகரத்துக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு வனிதா ஒப்புதல் கொடுத்து இருக்கா. அப்படியே அவ அந்த ஆட்சேபனை மனு தாக்கல் செய்யாமல் இருந்து இருந்தாலும் நாலரை வயசுக் குழந்தைகளை தாயிடம் இருந்து பிரிக்க எந்தக் கோர்ட்டும் ஒப்புதல் கொடுத்து இருக்காது. நீ திட்டவட்டமா சொன்னா டாக்டர் அமுதா தன் கவுன்ஸிலிங்கினால் இந்த விவாகரத்தைத் தடுக்க முடியாதுன்னு ரிபோர்ட் கொடுப்பாங்க.”

விஸ்வா, “எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.