ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

விஸ்வா, “ஓ! ஐ அம் சோ சாரி”

சந்தியா, “இப்போ ஒன்றரை வருஷம் ஆச்சு”

விஸ்வா, “நீ வேற கல்யாணம் ஏன் இன்னும் செஞ்சுக்கலை? இன்னும் உன் கணவரை நினைச்சுட்டு இருக்கியா?”

சந்தியா இல்லையென தலையசைத்த படி, “சாரி, ரொம்ப பர்சனலான விஷயம்” என்றபடி அவசரமான எழுந்து அந்த அறையை விட்டுச் சென்றாள்.அவள் மேல் தனக்கு ஒரு ஈர்ப்பு வருவதை விஸ்வா உணர்ந்தான்.
ஒரு வாராந்திர மீட்டிங்கில் …

விஸ்வா, “ஓ.கே எவ்ரிபடி, டிஸ்கஸ் பண்ண வேற எதாவுது விஷயம் இருக்கா?”

வனிதா, “எஸ், outstanding receivables, sales policy and purchase policy இதில் எல்லாம் சில மாற்றங்கள் கொண்டு வரணும்”

விஸ்வா, “எல்லா பாலிஸிஸும் ஒழுங்கத்தானே இருக்கே. எதுக்கு மாத்தணும்”

வனிதா, “சொல்லறேன். கஸ்டமர்களுக்கு க்ரெடிட் கொடுப்பது. வசூல் செய்வது. இந்த பொருப்புகளை சேல்ஸ் டிபார்ட்மென்ட் மட்டும் கவனிச்சுட்டு இருக்காங்க. நிறைய தரம் கஸ்டமர் கிட்டே இருந்து வர வேண்டிய பாக்கி இருந்தாலும் மேலும் ஆர்டர்ஸ் அக்ஸெப்ட் பண்ணிட்டு ஷிப்மெண்டும் போகுது. நமக்கு தேவையான அளவுக்கும் அதிகமா வர வேண்டிய பாக்கி இருந்தாலும் மாசக் கடைசியில் செலவுகளுக்கு பேங்கில் கடன் வாங்கறோம். I want to put some control”

விஸ்வாவுக்கு கீழ் பணியாற்றும் சேல்ஸ் மேனேஜர் சற்றே நெளிந்தபடி, “புதுசா வந்து இருக்கும் கஸ்டமர்ஸ் கைவிட்டுப் போயிடக் கூடாதுன்னு சில சமயம் அந்த மாதிரி நடக்கும்”

வனிதா, “நாலு வருஷத்துக்கு முன்னாடி அவங்க எல்லாம் புதுசா ஆர்டர் கொடுத்தாங்க. நாலு வருஷமா தொடர்ந்து நம்ம கிட்டே இருந்து மட்டும் தான் அவங்க வாங்கறாங்க. நாம் சப்ளை செய்யும் சில ப்ராடெக்ட்ஸ் நாம் கொடுக்கும் தரத்தோடு வேறு யாரிடமும் நாம் கொடுக்கும் விலையில் அவங்களுக்கு கிடைக்காது. இருந்தாலும் அவங்களுக்கு நாம் முப்பது நாள் க்ரெடிட் கொடுக்கறோம். நாம் சப்ளை செய்வது முக்கால் பாகத்துக்கும் மேல் கேபிடல் கூட்ஸ். யாரும் கேபிடல் கூட்ஸுக்கு அந்த அளவுக்கு க்ரெடிட் கொடுக்கறது இல்லை”

சேல்ஸ் மேனேஜர், “எப்பவாவுது ஒரு முறை வாங்கும் கம்பெனிகள் கிட்டே கறாரா பேசி அட்வான்ஸ் கொடுத்தாத்தான் சப்ளை பண்ணுவோம்ன்னு சொல்லலாம். ஆனா வாடிக்கையா வாங்கிட்டு இருப்பவங்க கிட்டே க்ரெடிட் கொடுத்தே ஆகணும்”

விஸ்வா, “யாருக்கெல்லாம் அந்த மாதிரி க்ரெடிட் கொடுக்கறோம்?”

சேல்ஸ் மேனேஜர், “இப்போ புதுசா வந்து இருக்கும் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனிகள் நாடு முழுக்க நிறைய ப்ராஞ்ச் திறந்துட்டே இருக்காங்க. மாசம் ஒண்ணு ரெண்டு ஆர்டர் கொடுக்கறாங்க”

விஸ்வா, “யூ மீன் புது ஃபேக்டரியில் செய்யும் மாஸ் வேயிங்க் ஸ்கேல்ஸா?”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.