ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

விஸ்வா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தான்.

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, தன் வாழ்க்கைத் துணையை நல்லா புரிஞ்சுக்கறது தான் நல்ல தாம்பத்தியத்துக்கு முக்கியத் தேவை. ஒருத்தர் மனத்தில் இருப்பதை, ஒருத்தர் தேவைகளை மத்தவர் புரிஞ்சுக்கணும். புரிய வைக்கணும். மத்தது எல்லாம் தனா சரியாயிடும். வாழ்க்கைத் துணையை தன் சொந்தச் சொத்து. தன் தேவைக்கு ஏத்த மாதிரித்தான் அவங்க தேவைகள் இருக்கணும்ன்னு நினைச்சா அது கொத்தடிமை”

விஸ்வா, “சோ, நீங்களும் என்னைத்தான் ப்ளேம் பண்ணறீங்க. இல்லையா?”

டாக்டர் மதுசூதன், “நான் சொன்னது ரெண்டு பேருக்கும் பொருந்தும். தப்பு வனிதா மேல் தான் அப்படின்னு நீ நினைக்கலாம். ஒரு அளவுக்கு அது உண்மையும் கூட. ஆனா நீ உன் தப்பை நீ உணர்ந்து இருந்தா அவளோட தப்பை தடுத்து இருக்கலாம்ன்னு சொல்றேன்”

விஸ்வா, “ஆறு வருஷத்துக்கு முன் சந்திரசேகர் அப்படி கண்டிஷன் போட்டார்ன்னு வனிதா எங்கிட்டே சொல்லி இருந்தா நிச்சயம் நான் அனுமதிச்சு இருக்க மாட்டேன். I would have taken up the matter with Shanmugam”

டாக்டர் மதுசூதன், “True. ஆனா, என்ன நடந்து இருக்கும்? சுமதி சந்திரசேகர் மேல் விவாகரத்து கேஸ் போட்டு இருப்பாங்க. சந்திரசேகரை போகச் சொல்லிட்டு சண்முகம் கம்பெனியை எடுத்து நடத்தி இருப்பார். ஆனா உன்னை PMLஇல் வேலையில் எடுத்து இருப்பாங்களா? யோசிச்சுப் பாரு”

விஸ்வா மௌனம் காக்க …

டாக்டர் மதுசூதன், “அந்தக் கம்பெனியில் சேரும் போது சந்திரசேகரைப் பத்தி என்ன நினைச்சே? உண்மையா பதில் சொல்லு”

சற்று நேர மௌனத்திற்குப் பிறகு விஸ்வா, “அவர் ஒரு நல்ல நிர்வாகின்னு நினைச்சேன். கம்பெனியை நல்லா நடத்தறார்ன்னு நினைச்சேன். அவரின் நிர்வாகத் திறமையை மதிச்சேன்”

டாக்டர் மதுசூதன், “ஆறு வருஷத்தில் அவர் நிர்வாகத் திறமை குறைஞ்சதா? இல்லை நீ தப்பா எடை போட்டியா?”

விஸ்வா, “நான் தவறா கணிக்கலை. அவர் ஒரு நல்ல நிர்வாகிதான் ஆனா கம்பெனியை எப்படி முன்னுக்கு கொண்டு வரணும்ன்னு அவருக்குத் தெரியலை. அப்படித் தெரிஞ்ச விஷயங்களையும் தன் மாமனார் மறுத்துடுவார்ன்னு நினைச்சார். அதனால் இருப்பதை இருப்பது போல நடத்திட்டு வந்தார்”

டாக்டர் மதுசூதன், “அவர் உன்னை வேலைக்கு எடுத்துக்க தன் சம்மதத்தை தெரிவிச்சப்ப நீ அவரைப் பத்தி என்ன நினைச்சே?”

விஸ்வா, “ரொம்ப ஜாக்கிரதையான பேர்வழின்னு நினைச்சேன். அவர் மனசில் நிச்சயம் ரிஸ்க் எடுப்பதா நினைச்சு இருப்பார்ன்னு நினைச்சேன். அவரே எங்கிட்டே சொன்னார்”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.