ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

வனிதா, “தெரியும். நாம் அவங்க கிட்டே க்ரெடிட்டில் வாங்க முடியாது. ஆனா ஏன் தேவைக்கும் அதிகமா உபரிப் பொருட்களை வாங்கி ஸ்டாக்கில் வைக்கறோம்? நாம் போட்ட அதே ஒப்பந்தத்தில் ஏர் ஃப்ரைட் மூலம் அனுப்பும் உபரிப் பொருட்களை பதினைந்து நாட்களிலும் கப்பல் மூலம் அனுப்பும் பொருட்களை ஒரு மாதத்திலும் நமக்கு டோர் டெலிவரி கொடுக்க அவங்க ஒத்துட்டு இருக்காங்க. இருந்தாலும் எதுக்கு நம்மிடம் எப்பவும் மூணு மாத உற்பத்திக்குத் தேவையான உபரிப் பொருட்கள் எப்பவும் ஸ்டாக்கில் வைக்கணும்?”

பர்சேஸ் மேனேஜர், “சண்முகம் சார் கவனிச்சுட்டு இருந்த காலத்தில் இருந்து எப்பவும் மூணு மாச ப்ரொடக்ஷனுக்குத் தேவையான ரா மெடிரியல்ஸ் வெச்சு இருப்பது வழக்கம்”

வனிதா, “லோகல் ரா மெடிரியல்ஸ் சப்ளையர்க்ளிடம் நமக்கு அந்த மாதிரி ஒப்பந்தம் இல்லை. சில சமயங்கள் ரா மெடிரியல்ஸ் இல்லாததால் உற்பத்தி தடை பட்டுப் போகுதுன்னு அப்படி முடிவு எடுத்தாங்க. ஆனா அதே வழக்கத்தை இந்த ஜாயிண்ட் வெஞ்சரிலும் நாம் கடை பிடிக்கத் தேவை இல்லை”

விஸ்வா, “இதில் எவ்வளவு பணம் மிச்சப் படுத்தலாம்?”

வனிதா, “ஒரு வருஷத்தில் முடிக்கலாம் அப்படின்னு நினைச்ச ஃபேக்டரி விரிவாக்கத்தை ஆறு மாதத்தில் முடிக்கும் அளவுக்கு பணம் மிச்சமாகும். We can push our bottom line up by at least 3%”

விஸ்வா, “வாவ். Let’s do it then”

பர்சேஸ் மேனேஜர், “எப்படி நம் பர்சேஸ் பாலிஸியை மாத்தணும்?”

சேல்ஸ் மேனேஜர், “எப்படி நம் சேல்ஸ் க்ரெடிட் பாலிஸையை மாத்தணும்?”

வனிதா, “க்ரெடிட் பாலிஸி, மேனுஃபாக்சரிங்க், ரா மெடீரியல் ப்ரொக்யூர்மெண்ட் இதில் எல்லாம் என்னென்ன மாற்றங்கள் செய்யணும்ன்னு ஒரு ப்ரெஸெண்டேஷன் ப்ரிபேர் பண்ணி இருக்கேன். நீங்க பாருங்க. அடுத்த ரிவ்யூ மீட்டிங்கில் டிஸ்கஸ் பண்ணலாம்”

விஸ்வா, “எதுக்கு அடுத்த மீட்டிங்க் வரை தள்ளிப் போடணும்? அதையும் டிஸ்கஸ் பண்ணி க்ளோஸ் பண்ணிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகாது”

வனிதா, “நோ, வீட்டில் என் குழந்தைகள் எனக்காக காத்துட்டு இருப்பாங்க. தவிற, இன்னைக்கே முடிவு எடுத்தாலும் அந்த முடுவுகளை செயல் படுத்த ஒண்ணு ரெண்டு மாசம் ஆகும். So, I see no point in rushing our decision” என்ற படி எழுந்து நின்றாள்.

விஸ்வா கடந்த நான்கு வருடங்களில் பல முறை உடனடித் தேவை இல்லாதவற்றில் பல மணி நேரங்கள் தன் அலுவலகத்தில் கழித்து தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் செலவு செய்ய வேண்டிய நேரத்தை வீணாக்கியதை எண்ணி வெட்கினான்.

வனிதா சென்ற பிறகு தன் கேபினில் தனிமையில் அமர்ந்து இருந்த விஸ்வாவின் கைபேசி சிணுங்கியது.

விஸ்வா, “சொல்லுங்க கர்னல். எப்போ திரும்ப வந்தீங்க?”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.