ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

சிறிது நேரம் மௌனம் காத்த வனிதா கிசு கிசுத்த குரலில், “இப்போ தெரியுது. அந்த சமயத்தில் அப்படி தோணலை”

டாக்டர் அமுதா, “ஏன்”

வனிதா, “It was just sex not love. நான் விஸ்வாவுக்கு துரோகம் செய்யறதா நினைக்கலை. அட்லீஸ்ட் அந்த சமயத்தில் நான் அந்த மாதிரித்தான் யோசிச்சேன்”

டாக்டர் அமுதா, “I want to hypnotise you. சில எண்ணங்கள் உன் ஆழ் மனசில் இருக்கு. எதோ ஒரு காரணத்தினால் அந்த எண்ணங்கள் உள்ளே புதைஞ்சு இருக்கு. ஹிப்னடைஸ் பண்ணினா அந்த எண்ணங்கள் தானா வெளியில் வரும் நீயும் அவைகளை புரிஞ்சுக்க முடியும். அதற்குப் பிறகு அந்த எண்ணங்களின் அடிப்படைக் காரணங்களை தெரிஞ்சுக்கலாம். வருங்காலத்தில் உனக்கு இது ரொம்ப முக்கியம். உனக்கு சம்மதமா?”

வனிதா, “I know about hypnosis .. ஆனா அது … ”

டாக்டர் அமுதா, “ஹினாடிஸத்தில் வெவ்வேறு அணுகு முறைகள் இருக்கு. வெவ்வேறு காரணங்களுக்காக ஹினாடிஸத்தை உபயோகிக்கலாம். ஒருத்தரின் ஆழ் மனத்தில் இருக்கும் நினைவுகளை வெளியில் கொண்டு வரவும் பயன் படுத்தலாம். நான் உன்னை ஹினடைஸ் பண்ண சம்மதம் கேட்டது நீ உன்னை நல்லா புரிஞ்சுக்கறதுக்காக. மத்தபடி நான் உன்னை உனக்கு வேண்டாததை செய்யவைக்க மாட்டேன்”

வனிதா சிறிது நேரம் யோசித்த பிறகு பெருமூச்சு விட்ட படி, “சரி”

டாக்டர் அமுதா, “வனிதா, நான் பார்த்த வரை பொதுவா மனைவி முறைகேடான உறவில் ஈடுபடும் போது விவாகரத்தில்தான் முடியும். இந்தக் காரணத்தினால் நான் வழக்கமா அந்த மாதிரி கேஸ் எடுத்துப்பது இல்லை. கேஸ் ஹிஸ்டரியை படிச்சுப் பார்த்த போது உங்க கேஸ் கொஞ்சம் மாறு பட்டு இருந்தது. ரெண்டு பேரும் சின்ன வயசில் இருந்து பெற்றோர்களின் ஆதரவோடு காதலிச்சு கல்யாணம் செஞ்சுட்டு இருக்கீங்க. சின்ன வயசில் குழந்தைகள். இப்படி இருந்தும் ஏன் விவாகரத்துன்னு ஒரு க்யூரியாஸிடியில் எடுத்துட்டேன். முதல் சிட்டிங்க் முடியும் போதே நீ எந்த அளவுக்கு விஸ்வாவைக் காதலிக்கறேன்னு புரிஞ்சுகிட்டேன். உன் வீட்டுக்கு வந்து பார்த்தப்போ அந்தக் குழந்தைகளை எவ்வளவு நல்லா வளர்க்கறீங்கன்னும் புரிஞ்சுது. உண்மையா நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க விரும்பறேன். நான் செய்யறது எல்லாம் உன் நன்மைக்காக மட்டும்தான் அப்படி-ன்னு நீ முழுசா நம்பணும். ஓ.கே?”

வனிதா, “எஸ் டாக்டர்”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.