ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

வனிதா புன்னகைத்தபடி, “ஓ! நான் அங்கே போயிருக்கேன். ஈஜிப்ட் டூர் போனப்போ அப்பா அப்படியே இஸ்ரேலுக்கும் கூட்டிட்டுப் போனார். அப்போ போனோம். I was fun”

டாக்டர் அமுதா, “வாவ். இப்போ நீ அங்கே போனதைப் பத்தி நல்லா ஞாபகப் படுத்திக்கோ. Take your time. அங்கே இருக்கற மாதிரி கற்பனை செஞ்சுக்கோ”

வனிதா, “ஓ.கே”

டாக்டர் அமுதா, “சீரா சாதாரணமா முச்சு விடு. Let your body relax … ”

வனிதா, “ம்ம்ம்”

டாக்டர் அமுதா, “நீ இப்போ அந்த டெட் ஸீல மிதக்கற மாதிரி நினைச்சுக்கோ”

வனிதாவி, “ம்ம்ம்”

டாக்டர் அமுதா தன் குரலை மிகவும் தாழ்த்தி, “உன் கால்கள் இப்போ பாதி மட்டும் தண்ணிக்கு வெளியே இருக்கு அனா மீதிப் பகுதி தண்ணிக்குக் கீழே இருக்கு. உன் இடுப்பு பாதிக்கும் கீழே தண்ணிக்குள்ளே இருந்தாலும் அதுக்குக் கீழே போகாமல் மிதந்துட்டு இருக்கு. Do you feel so?”

வனிதா, “எஸ்”

டாக்டர் அமுதா, “இடுப்புக்கு மேலேயும் கழுத்து வரை உன் உடம்பு பாதி தண்ணியில் மிதந்துட்டு இருக்கு. தண்ணிக்கு மேலே வரவோ கீழே போகவோ நீ எந்த முயற்சியும் எடுக்கலை”

வனிதா, “ம்ம்ம்”

டாக்டர் அமுதா, “உன் முகம் மட்டும் தண்ணிக்கு மேலே இருக்கு. காதுகளுக்கு பின்புறம் எல்லாம் தண்ணிக்குள்ளே இருக்கு”

வனிதாவின் முகத்தில் மெதுவாக சாந்தம் பரவியது. புன்னகைத்தவாறு, “ம்ம்ம்”

டாக்டர் அமுதா, “அப்படியே மிதந்துட்டே இப்போ நீ கடந்த காலத்தைப் பத்தி நினைக்கறே”

வனிதா, “ம்ம்ம்”

டாக்டர் அமுதா, “நீ அன்னைக்கு ஸ்கூலில் இருந்து வந்தப்போ உங்க அப்பாவும் ஸில்வியா ஆன்டியும் ஒண்ணா இருக்காங்க”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.