ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

டாக்டர் அமுதா, “முதலில் விஸ்வாவின் வேலைக்காக ஏற்பட்ட தொடர்பைப் பத்தி சொல்லு”

வனிதா, “அவர் அப்படி கேட்ட உடனே அவர் மேல ரொம்ப கோவம் வந்தது. அவரை திட்டிட்டு வெளியே போயிட்டேன். அடுத்த நாள் அவர் மறுபடி தன் கேபினுக்கு வரச் சொன்னார். முதலில் மன்னிப்பு கேட்டார். பிறகு வீட்டில் சுமதி மேடம் அவரை கவனிச்சுக்கறதே இல்லைன்னு ஆரம்பிச்சார். என்னைப் பார்த்த முதல் நாளில் இருந்து என் மேல் ஆசைப் பட்டதா சொன்னார். விஸ்வாவை வேலைக்கு எடுத்துக்கறதில் தனக்குத்தான் ரிஸ்க் அப்படின்னு சொன்னார். விஸ்வா அது வரைக்கும் வொர்க் பண்ணிட்டு இருந்த இன்டஸ்ட்ரி வேற PML வேற. அதனால் அவ்வளவு சீக்கிரமா விஸ்வா தொழிலைப் பத்தி கத்துட்டு அதில் ஷைன் பண்ண முடியாதுன்னு சொன்னார். ஒரு வேளை அவங்க எதிர்பார்த்த மாதிரி விஸ்வா ரிஸல்ட்ஸ் கொடுக்கலைன்னா பழி தன் பேரில் தான் விழும்ன்னார். ஆனா, அவரால் முடிஞ்ச வரை விஸ்வா சீக்கிரம் தொழிலைப் பத்தி கத்துக்க உதவி செய்வதா வாக்கு கொடுத்தார். தன் கூட இருப்பதால் எங்க கல்யாணத்துக்கு எந்த விதமான பாதிப்பும் வராதுன்னு சொன்னார். அவருக்கு வீட்டில் கிடைக்காததை என் கிட்டே கேட்பதா கெஞ்சினார். He said he was desperate for sexual release”

டாக்டர் அமுதா, “விஸ்வாவை வேலைக்கு சேர்த்துக்கறதில் இருக்கும் சிக்கல்களைப் பத்தி அவர் சொன்னது சரியா?”

வனிதா, “எஸ். ஒரு அளவுக்கு சரிதான்”

டாக்டர் அமுதா, “அப்பறம் எப்படி விஸ்வா அந்த அளவுக்கு முன்னேற முடிஞ்சுது?”

வனிதா, “I under estimated Viswa. சேர்ந்து ரெண்டு மாசத்தில் ஒரு பெரிய ஆல் இண்டியா லெவல் ஆர்டர் ஆர்மி CSD Canteen இல் இருந்து. வாங்கிட்டு வந்தார். சந்திரசேகர்கூட எதிர்பார்க்கலை. அதற்குப் பிறகு பெரிய பெரிய கம்பெனிகளில் இருந்து ரெண்டு மூணு ஆர்டர்ஸ். People started respecting him”

டாக்டர் அமுதா, “ஒரு வேளை அவன் ஆர்மியில் இருந்த அனுபவத்தினால் அவனுக்கு ஆர்டர்ஸ் கிடைச்சுதா?”

வனிதா, “ஆர்மி, ஏர்ஃபோர்ஸ், நேவி டிபார்ட்மெண்ட்களில் இருந்து ஆர்டர் பிடிக்கறதுக்குன்னு டெல்லியில் ஒரு ரிடையர்ட் ஆர்மி ஆஃபீஸரை ஏற்கனவே நியமிச்சு இருந்தாங்க. அவரால் செய்ய முடியாததை விஸ்வா செஞ்சார்”

டாக்டர் அமுதா, “அவனால் எப்படி அந்த ஆர்டர்களை வாங்க முடிஞ்சுது?”

வனிதா, “அவரோட அணுகுமுறை. நாம் தயாரிக்கும் பொருளில் சின்ன மாற்றங்கள் செய்ய சண்முகம் சார் கிட்டே அனுமதி வாங்கி இருக்கார். அதற்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு என்ன வேணும்ன்னு சரியா தெரிஞ்சுட்டு அதுக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்வதா ஒப்புதல் கொடுத்து ஆர்டர் வாங்கி இருக்கார். மார்கெட்டுக்குத் தகுந்த மாதிரி ப்ராடெக்ட்ஸை டிவலப் பண்ணினார். நான் அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்த விதத்தை நினைச்சு ரொம்ப வெட்கப் பட்டேன். இன்னமும் வெட்கப் படறேன்”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.