ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

டாக்டர் அமுதா, “இதுக்கு முன்னாடி உன்னை யாராவுது ஹிப்னடைஸ் பண்ணி இருக்காங்களா?”

வனிதா, “இல்லை”

அவருக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தும் டாக்டர் அமுதா, “இது வரைக்கும் நீ சைக்கியாட்ரிஸ் யாருடனாவுது ட்ரீட்மெண்ட் எடுத்து இருக்கியா?”

வனிதா, “எஸ் … நான் சின்ன வயசில் இருந்தப்போ … ” என்று தொடங்கியவள், “I am sorry … it is very personal”

டாக்டர் அமுதா, “வனிதா, நான் ஏற்கனவே உங்க அம்மாவுடன் பேசியாச்சு .. நடந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு தெரியும்”

வனிதா கண்கள் அகல “அம்மா சொன்னாங்களா?”

டாக்டர் அமுதா, “அந்த விஷயம் வெளியில் தெரிஞ்சா உங்க பேரண்ட்ஸுக்கு அவமானம்னாலும் உன் நன்மைக்காக என் கிட்டே அந்த விவரங்களை சொன்னாங்க”

வனிதா, “எஸ் அந்த சமயத்தில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே கூட்டிட்டுப் போனாங்க. ஆனா அப்போ நடந்தது எதுவும் சரியா ஞாபகம் இல்லை”

டாக்டர் அமுதா, “இட்ஸ் ஓ.கே. ஆரம்பிக்கலாமா?”

வனிதா, “சரி”

டாக்டர் அமுதா, “வா” என்று அழைத்த படி அடுத்து இருந்த சற்றே இருட்டான அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்த சைக்கியாட்ரிஸ்ட் கவுச் (Psychiatrist couch) என அழைக்கப் படும் ஒற்றை சோஃபாவில் வனிதாவைப் படுக்கச் செய்தார்.

டாக்டர் அமுதா, “வனிதா, இப்போ நான் உன் நினைவுகளை தெளிந்த ஆழ்ந்த நிலைக்குக் கொண்டு போகப் போறேன். அந்த நிலை மறைந்த பிறகும் உனக்கு நடந்தது எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கும். ஓ.கே?”

வனிதா, “எஸ்”

டாக்டர் அமுதா, “முதலில் நான் உன்னை ரிலாக்ஸ் பண்ண வைக்கப் போறேன். நல்லா கால் நீட்டி ரிலாக்ஸ்டா சாய்ஞ்சு உக்காந்துக்கோ. தூக்கம் வருவது மாதிரி இருந்தா சொல்லு. என்ன?”

வனிதா, “தூக்கம் வரலை ஆனா பட படப்பா இருக்கு”

டாக்டர் அமுதா, “இட்ஸ் ஓ.கே. உடம்பை நல்லா லூசா விடு” என்றபடி வனிதாவின் கைகளை பற்றி மெதுவாக நீவி விடுவது போல மஸ்ஸாஜ் செய்தார். பிறகு அவளுக்கு பின்னால் நின்றவாறு அவளது கழுத்து மற்றும் தோளை மஸ்ஸாஜ் செய்த படி, “ம்ம்ம் … எஸ் அப்படித்தான் லூஸா விடு. உனக்கு டெட் ஸீ (Dead Sea) பத்தி தெரியுமா? (Dead Sea – சாக்கடல் என்பது இஸ்ரெல் நாட்டு எல்லையில் இருக்கிறது. அதன் நீரில் உப்பு அதிக அளவில் இருப்பதால் அதில் இறங்கினால் நம் உடல் தானாக மிதக்கும்)”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.