ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

டாக்டர் அமுதா, “ஏன் வெறுப்பா இருக்கு?”

வனிதா, “நான் செஞ்ச காரியத்தை நினைச்சு …”

டாக்டர் அமுதா, “அதை எப்படி தவிர்த்து இருக்கலாம்ன்னு இன்னைக்குப் பார்க்கலாமா?”

வனிதா, “இப்போ அதைப் பத்தி யோசிச்சு என்ன பிரயோஜனம்?”

டாக்டர் அமுதா, “உனக்கு என்ன வயசாச்சு?”

வனிதா, “முப்பது”

டாக்டர் அமுதா, “வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய வயசு அது. நீ ஏன் எல்லாம் அஸ்தமனம் ஆன மாதிரி பேசறே?”

வனிதா, “விஸ்வா இல்லாத வாழ்க்கையை என்னால் அனுபவிக்க முடியாது … ”

டாக்டர் அமுதா, “ஏன்? வேலையே கதின்னு இருந்தவன் இல்லாமல் இருந்தா என்ன போச்சு? வேறு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு ஜாலியா வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதானே”

வனிதா, “எங்களைச் சேர்த்து வைக்கறேன்னு சொன்ன நீங்களே இப்படி சொல்லறீங்க”

டாக்டர் அமுதா, “Correction .. சேர்த்து வைக்க முயற்சிக்கறேன்னு சொன்னேன். பிரிஞ்சு போனாலும் நல்ல நட்போடு விலகணும்ன்னு சொன்னேன்”

வனிதா, “But I love him. I know he still loves me. முன்னாடி எல்லாம் அவரால மட்டும்தான் நான் செஞ்சதை ஜீரணிக்க முடியாமல் இருந்தது. இப்போ என்னாலே நான் செஞ்சதை ஜீரணிக்க முடியலை. அதுதான் உண்மை. விஸ்வா, நான் I am sorry அப்படின்னு சொன்னதுக்கு. எதுக்கு வருத்தப் படறே? நீ செஞ்சதுக்கா இல்லை நீ செஞ்சது எனக்கு தெரிஞ்சுட்டதுக்கான்னு கேட்டார். நான் செஞ்சது அவருக்கு தெரிஞ்சதுக்காக மட்டும்தான் வருத்தப் படறேன்னு குத்தம் சாட்டினார். இப்போ நினைச்சுப் பார்த்தா அவருக்கு தெரியறதுக்கு முன்னாடி நான் வந்து உங்களை மீட் பண்ணி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்ன்னு தோணுது”

டாக்டர் அமுதா, “வனிதா, கல்யாணம் ஆன புதுசில் அவனுக்கு தன் மேல் நம்பிக்கை வரவைக்க நீ என்ன செஞ்சே?”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.