ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

வனிதா, “இப்போ நான் என்ன செய்யணும்?”

டாக்டர் அமுதா, “அவனுடன் அவர் பேசிய பிறகு அவனை உன் கூட பேச சம்மதிக்க வைக்கறதா சொல்லி இருக்கார். அதற்கு முன்னாடி அவர் உன் கூட பேசவும் விருப்பப் படலாம். You must be prepared”

வனிதா கிசு கிசுத்த குரலில், “Yes. I have to”

டாக்டர் அமுதா, “வனிதா, நான் உன் அஃபேரைப் பத்தி விவரமா பேசச் தொடங்கினேன். ஆனா என்னோடு அந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள வெட்கப் பட்டு நீ பாதியிலேயே விஸ்வாவுடன் நேரடியா பேச முடிவு எடுத்தே. இல்லையா?”

வனிதா, “I was ashamed of what I did. அதான் … ”

டாக்டர் அமுதா, “It is O.k. நடந்த விஷயங்களை விஸ்வாவுடன் பேச உன் மனம் கூசும். என்னோடு ஒரு முறை பேசினா அந்தக் கூச்சம் குறையும். அதுதான் நான் உன்னை என்னோடு பேசச் சொன்னதுக்கு முதல் காரணம்”

வனிதா, “Yes. I understand”

டாக்டர் அமுதா, “ஆனா, இன்னொரு காரணமும் இருக்கு”

வனிதா, “என்ன?”

டாக்டர் அமுதா, “வனிதா, நம் மனசில் ஏற்படும் தூண்டுதல்களால் நாம் சில காரியங்களில் ஈடு படறோம். ஆனா, நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் நாம் தான் பொறுப்பு ஏத்துக்கணும். உன் மனசில் இருந்த தூண்டுதல்கள், உனக்கு நீயே கற்பித்துக் கொண்ட காரணங்கள், உனக்கு நீயே சொல்லிக் கொண்ட விளக்கங்கள் இதை எல்லாம் நீ நல்லா புரிஞ்சுக்கணும். அதுதான் அடுத்த காரணம்”

வனிதா மௌனமாகத் தலையசைத்தாள்

டாக்டர் அமுதா, “ஆனா, நீ செஞ்சது சரியாயிடாது. அதை முதலில் நீ புரிஞ்சுக்கணும்”

வனிதா, “எஸ்”

டாக்டர் அமுதா, “சந்திரசேகருடன் உனக்கு இருந்த தொடர்பைப் பத்தி விவரமா சொல்லு”

வனிதா, “Where should I start?”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.