ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

வனிதாவின் முகம் இறுகியது …

டாக்டர் அமுதா, “ரிலாக்ஸ் … ஓ.கே?”

வனிதா, “எஸ் … They were having sex”

இப்படித் தொடங்கி கடந்த காலத்தில் நடந்தவற்றை, மறந்து போனவற்றை, மறக்க வேண்டும் என அவள் நினைத்து இருந்தவற்றை ஒவ்வொன்றாக வனிதாவை நினைத்துப் பார்கக் வைத்தார். முடிவில் ஆழ்ந்த நிலையில் இருந்தவளை மெதுவாக சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்.

சகஜ நிலைக்கு வந்த பிறகு வனிதாவின் முகத்தில் மெதுவாகத் தோன்றிய சோகம் சில கணங்களில் அழுகையாக மாறி வெடித்துச் சிதறியது …

அழுது குலிங்கியவளை ஆதரவாக அணைத்தபடி டாக்டர் அமுதா அவள் அழுகை முடியும் வரை மௌனம் காத்தார். தொடர்ந்த அழுகை லேசான விசும்பல்களான பிறகு

டாக்டர் அமுதா, “இட்ஸ் ஓ.கே டியர். ‘வெறும் செக்ஸ் வெறும் செக்ஸ்’ அப்படின்னு உனக்கு நீயே சொல்லிட்டதுக்கு காரணம் நீ இல்லைன்னு இப்போ புரியுதா?”

வனிதா விசும்பல்களுக்கு இடையே, “எஸ்”

டாக்டர் அமுதா, “வனிதா, ரெண்டு உடல்கள் மட்டும் அல்லாமல் உள்ளங்களும் சேர்ந்து இணையும் போது செக்ஸின் அர்த்தமே வேறு. செக்ஸ் அப்படித்தான் இருக்கணும். அப்படி இருக்கும் போது அது புனிதமானது. உடல்கள் மட்டும் இணையும் போது அது ஒரு அருவெறுக்கத்தக்க கேளிக்கை. விபசாரம் மாதிரி”

வனிதா, “ம்ம்ம்”

டாக்டர் அமுதா, “உன் உடலை உளமார்ந்த காதலுடன் விஸ்வாவுக்கு மட்டும்தான் கொடுப்பேன்னு திருமணத்தில் நீ அவனுக்கு வாக்குக் கொடுத்தே. உன் உடலை மட்டும் சந்திரசேகருக்குக் கொடுத்தேன்னு சொன்னா விஸ்வாவைப் அவமதிப்பது போல இல்லையா?”

வனிதா, “எஸ்”

டாக்டர் அமுதா, “சரி. இன்னைக்கு இதோட முடிச்சுக்கலாம். இந்தக் கோணத்தில் நீ செஞ்சதை யோசிச்சுப் பாரு. ரெண்டு நாளைக்குப் பிறகு மறுபடி மீட் பண்ணலாம். In the meanwhile டாக்டர் மதுசூதனுடன் விஸ்வா பேசறது எந்த அளவுக்கு முன்னேறி இருக்குன்னு விசாரிக்கறேன். ஓ.கே?”

வனிதா, “ஓ.கே டாக்டர்”

வனிதா விடைபெற்றுச் சென்றாள் ….

காலை சரியாக பத்தரை மணி …

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.