ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

டாக்டர் மதுசூதன், “அவன் ரூல்ஸ் படி பாக்ஸ் பண்ணுவான்னு நீ எதிர்பார்க்கக் கூடாது. அதுக்காகத்தான் இந்த முன் ஏற்பாடு”

ஜஸ்வந்த், “நான் எந்த மாதிரி பாக்ஸ் பண்ணனும். ப்ராக்டீஸ் பவுட் (Practice bout – பயிற்சிச் சண்டை) மாதிரியா இல்லை … ” என்று இழுக்க

டாக்டர் மதுசூதன், “நான் சொல்ற வரைக்கும் நீ ப்ராக்டீஸ் பவுட் மாதிரி டிஃபெண்ட் மட்டும் பண்ணு. ஆனா அவன் அப்படி சண்டை போட மாட்டான். நான் சொல்லும் போது மட்டும் நீ உன் கைவரிசையைக் காட்டு. ரொம்ப ஃபோர்ஸா வேண்டாம்”

ஜஸ்வந்த், “ஆக மொத்தம் என்னை அடி வாங்கிக்கச் சொல்லறீங்க”

டாக்டர் மதுசூதன், “More or less. தாக்குப் பிடிப்பியா?”

ஜஸ்வந்த், “பதினஞ்சு வருஷம் பாக்ஸிங்க் செய்யாத ஒருத்தருடன் தோக்கறதுக்காக நான் ஆல் ஆர்மி சாம்பியன் ஆகலை கர்னல்”

டாக்டர் மதுசூதன், “O.k, handle him with care”

சிறிது நேரத்தில் விஸ்வா அங்கு வர, அவனை ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மேசைக்கு எதிர் எதிரே இரு நாற்காலிகள் இருந்தன. விஸ்வாவை அமரப் பணித்து அவன் எதிரில் அவர் அமர்ந்தார். மேசையில் இருந்த பாக்ஸிங்க் க்ளவுஸ்ஸை (boxing gloves – குத்துச் சண்டை கை உறைகள்) விஸ்வாவிடம் கொடுத்து அவனை அணிந்து கொள்ளச் சொன்னார்.

அணிந்த படி விஸ்வா, “என்ன டாக்டர், கவுன்ஸிலிங்க் செஷனா? இல்லை பாக்ஸிங்க் செஷனா?”

டாக்டர் மதுசூதன், “நீ ஜஸ்வந்த் கூட பாக்ஸ்ஸிங்க் செய்யணும். அதுக்கு முன்னாடியும் ஒவ்வொரு ரவுண்டுக்கும் நடுவிலும் கொஞ்சம் கவுன்ஸிலிங்க்”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.