ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

விஸ்வா, “எங்கே போறோம். நீங்க ஸ்போர்ட்ஸ் கிட் எதுவும் எடுத்துட்டு வரலையா?”

டாக்டர் மதுசூதன், “I stopped strenuous games and work-outs long ago. இப்போ என் ஒரே உடற்பயிற்சி கால்ஃப் மட்டும்தான். வொர்க் அவுட் உனக்குத்தான்”

மௌனமாக அவர் காட்டிய வழியில் காரைச் செலுத்தி ஒரு கட்டிடத்தின் முன்னால் நிறுத்தினான். அவன் எதுவும் சொல்வதற்கு முன் டாக்டர் மதுசூதன் இறங்கி அக்கட்டிடத்துக்குள் நுழைய அவரை பின் தொடர்ந்தான். உள்ளே சென்ற பிறகு அது ஒரு குத்துச் சண்டைப் பயிற்சி இடம் என்பதை உணர்ந்தான். அங்கு அவருக்காக ஆஜானுபாகுவான ஒரு இளைஞன் காத்து இருந்தான்.

டாக்டர் மதுசூதன், “ஹல்லோ ஜஸ்வந்த் ரெடியா?”

ஜஸ்வந்த், “ரெடி சார்”

டாக்டர் மதுசூதன் விஸ்வாவின் பக்கம் திரும்பி, “விஸ்வா, இது லெஃப்டினண்ட் ஜஸ்வந்த். ஷார்ட் சர்வீஸ் கமிஷனின் சேர்ந்தவன்” என்றபிறகு “இது கேப்டன் விஸ்வனாதன்” என்று விஸ்வாவை அறிமுகப் படுத்தினார்.

இருவரும் கை குலுக்கிய பிறகு விஸ்வா எதுவும் சொல்வதற்கு முன் டாக்டர் மதுசூதன், “விஸ்வா, அந்த மூலையில் ரெஸ்ட் ரூம்ஸ் இருக்கு. அங்கே லாக்கர்ஸும் இருக்கு போய் டீ-ஷர்ட், ஷார்ட்ஸ் கெட்ஸ் எல்லாம் போட்டுட்டு உன் ட்ரெஸ், வாட்ச், பர்ஸ் எல்லாம் ஒரு லாக்கரில் வெச்சுட்டு வா”

விஸ்வா, “என்ன டாக்டர் பாக்ஸிங்க் பண்ணச் சொல்லறீங்களா? ஐ.எம்.ஏவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு நான் பாக்ஸிங்க் பண்ணினதே இல்லை. I am totally out of touch”

டாக்டர் மதுசூதன், “பரவால்லை. நான் சொன்னதைச் செய்” என்று அவனை அனுப்பி வைத்தார்.

டாக்டர் மதுசூதன், “ஜஸ்வந்த், நீ ஃபார்மில் இருக்கியா?”

ஜஸ்வந்த், “Off course, I am in top form. ஆனா கர்னல் சாப், அவருக்கு பதினஞ்சு வருஷமா ப்ராக்டீஸே இல்லைன்னு சொல்லறார். இது ஓகேவா?”

டாக்டர் மதுசூதன், “அவனுக்கு ப்ராக்டீஸ் இல்லைங்கறதால நீ அஸால்டா இருந்துடாதே. அப்டாமன் கார்ட் போட்டுட்டு வந்து இருக்கியா”

ஜஸ்வந்த், “கர்னல் சாப், நீங்க என்ன ஐடியாவில் என்னை அவரோடு பாக்ஸ் பண்ணச் சொல்லறீங்கன்னு தெரியலை”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.