ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

டாக்டர் மதுசூதன், “அவங்களோட நடைமுறைகள், வழிமுறைகளை முழுவதுமா ஏத்துட்டு கடைபிடிக்கணும் இல்லைன்னா அது பிரச்சனையில் தான் முடியும். ரொம்ப ஆழமா போவாங்க. பாதியில் விட்டா ஆபத்து. ஆனா நம்ம ஊரில் மனோதத்துவ மருத்துவர்களுக்குக் கூட நம் பண்பாட்டின் தாக்கல் இருக்கும். அதனால பல விஷயங்கள் இலை மறை காயாத்தான் இருக்கும். இதில் இன்னும் ஒரு நன்மையும் இருக்கு. நம் அணுகு முறை நாம் ட்ரீட் பண்ணும் பேஷண்ட்ஸ்ஸை அவங்களாவே யோசிக்க விடுது. நாளடைவில் சுயமா யோசிச்சு இருந்தா வனிதா அந்த முடிவுக்கு வந்து இருக்க மாட்டா”

டாக்டர் அமுதா, “நீங்க சொல்றது ரொம்ப சரி. விஸ்வாகூட உங்க கவுன்ஸிலிங்க் எப்படி போயிட்டு இருக்கு?”

டாக்டர் மதுசூதன், “இப்போதைக்கு என் முக்கியக் குறிக்கோள் அவனை சுயமா எந்த மன வேதனையும் இல்லாம யோசிக்க வைப்பது. அவன் மனசில் குமுறிட்டு இருக்கும் உள்ளுணர்வுகள் அவனை சரியா யோசிக்க விடறது இல்லை. Removing these negative feelings is my primary objective now”

டாக்டர் அமுதா, “அதுக்கு என்ன செய்யப் போறீங்க?”

டாக்டர் மதுசூதன், “அவனுக்குள் இருக்கும் ஒவ்வொரு உள்ளுணர்வுக்கும் அதுக்கு தகுந்த மாதிரி அவனை யோசிக்க வைக்கப் போறேன். கோபம், இயலாமை இந்த ரெண்டு உள்ளுணர்வுகளுக்கும் முதலில் மருத்துவம் செய்யப் போறேன்”

டாக்டர் அமுதா, “கோபம் I can understand … ஆனா எப்படி இயலாமை?”

டாக்டர் மதுசூதன், “அவனுக்கு உடலில் நேர்ந்த பாதிப்பு வனிதாவின் நடத்தை, இது ரெண்டுக்கும் மேல அவங்களோட தொடர்பு அவனுக்கு தெரிய வந்த விதம் இதெல்லாம் அவன் மனசில் இயலாமையை ஏற்படுத்தி இருக்கு”

டாக்டர் அமுதா, “ஓ! விஸ்வா என்னிடம் அந்த அளவுக்கு வெளிப்படையா பேசலை”

டாக்டர் மதுசூதன், “எங்கிட்டேயும் பேசத் தயக்கப் பட்டான். முதலில் கொஞ்சம் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து, பழைய விஷயங்களை ஞாபகப் படுத்தி கொஞ்சம் கொஞ்சமா அவனை மனம் திறந்து பேச வெச்சேன்”

டாக்டர் அமுதா, “ஷாக் ட்ரீட்மெண்டா?”

டாக்டர் மதுசூதன், “ம்ம்ம் … Something to do with his war experience .. சாரி, அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. பட், பேசிக்கலி நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் எதிர்பார்க்காத பின் விளைவுகள் இருக்கலாம் என்பதை புரிஞ்சுக்க வெச்சேன்”

டாக்டர் அமுதா, “சோ, இந்த ரெண்டு உள்ளுணர்வுகளின் தாக்கம் இல்லாமல் இருந்தால் அவனால் தீர்க்கமா யோசிச்சு முடிவு எடுக்க முடியும். எப்படி ஹேண்டில் பண்ணப் போறீங்க?”

டாக்டர் மதுசூதன், “முதலில் அவனோட கோவம், அது காஞ்சு போயிருக்கும் காட்டில் பிடித்த நெருப்பு மாதிரி. காடு பாதிதான் எறிஞ்சு இருக்கு. காடு முழுக்க எறிஞ்ச பிறகுதான் அந்த நெருப்பு அணையும். அதற்குப் பிறகுதான் அந்தக் காட்டில் புதுசா துளிர் விடும். சோ, அவன் கோபத்தை அளவோடு அதிகப் படுத்த ஒரு வடிகாலுக்கு ஏற்பாடு செஞ்சு இருக்கேன்” என்று அவர் செய்யப் போவதை விளக்கினார்.

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.