ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 37

அதைக் கேட்ட விஸ்வா மேலும் ஆவேசத்துடன் தாக்க, டாக்டர் மதுசூதனின் சைகையைப் புரிந்து கொண்ட ஜஸ்வந்த் தன் தாக்குதலைத் தொடங்கினான். அவனது தாக்குதல்கள் விஸ்வாவின் அளவுக்கு அதிகரித்ததும் அப்படியே தொடரும் படி டாக்டர் மதுசூதன் மறுபடி சைகை செய்தார். பத்து நிமிடச் சண்டைக்குப் பிறகு டாக்டர் மதுசூதன், “ஒ.கே … இன்னைக்கு இவ்வளவு போதும்”

களைத்து வியர்வையில் நனைந்து இருந்த விஸ்வாவிடம், “விஸ்வா, ரெஸ்ட் ரூமுக்குப் போய் நல்லா ஒரு குளியல் போட்டுட்டு வா”

அவன் குளித்து உடை மாற்றி வந்த பிறகு

டாக்டர் மதுசூதன், “How do you feel now?”

விஸ்வா லேசான புன்முறுவலுடன், “ம்ம்ம் … ஓ.கே … I needed that. ஃப்ரெஷ்ஷா இருக்கு”

டாக்டர் மதுசூதன், “சரி, இப்போ என்னை ஆர்.எஸ்.ஐக்குக் கூட்டிட்டுப் போ. கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம்”

விஸ்வா, “ஓ.கே”

புறப்படுவதற்கு முன் அவர், “ஜஸ்வந்த், இன்னும் கொஞ்சம் நாளுக்கு கேப்டன் விஸ்வானாதன் டெய்லி சாயங்காலம் வருவார். ட்ரெயினிங்க் கொடு. ஓ.கே?”

ஜஸ்வந்த், “ஷூர் கர்னல் … ” என்று விடைபெற்றான்

காரில் செல்லும் போது டாக்டர் மதுசூதன், “இப்போ உன் மனசில் எந்த அளவுக்கு கோவம் இருக்கு?”

விஸ்வா, “ரொம்பவே குறைஞ்சு இருக்கு. ஆனா … ”

டாக்டர் மதுசூதன், “உன் மனசில் இருக்கும் மத்த விஷயங்களை ஒவ்வொண்ணா பார்க்கலாம்”

ஆர்.எஸ்.ஐ க்ளப்பை அடைந்த பிறகு PMLஇல் நடப்பவைகளைப் பற்றி விஸ்வாவுடன் சிறுது நேரம் பேசிக் கொண்டு இருந்தார். அவனது விவாகரத்தைப் பற்றிய பேச்சை எடுக்கவில்லை.

டாக்டர் அமுதா, “வா வனிதா. How are you?”

முகம் சோர்ந்து இருந்த வனிதா, “ம்ம்ம் … Not O.k” என்றவள், “Actually I feel like shit. என் மேலயே எனக்கு வெறுப்பா இருக்கு. குழந்தைகள் மட்டும் இல்லைன்னா நான் தற்கொலை செஞ்சுட்டு இருப்பேன்”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.