ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

வனிதா, “என்னால் அப்படிக் கற்பனை பண்ண முடியலை”

டாக்டர் அமுதா, “ஏன்?”

வனிதா தலை குனிந்து மௌனம் காத்தாள்

டாக்டர் அமுதா, “கற்பனை பண்ணிப் பார்க்கறதுக்கே உனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு. நேரடியா பார்த்து, நீயும் சந்திரசேகரும் பேசிட்டு இருந்ததைக் கேட்ட விஸ்வாவுக்கு எப்படி இருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு”

வனிதா அழுது குலுங்கத் தொடங்கினாள் …

டாக்டர் அமுதா கோடிட்டுக் காட்டிய காட்சிகளை மனதில் கற்பனை செய்த வனிதாவுக்கு தன் உடலின் ஒரு பகுதியை யாரோ ஒரு கோடாலியால் வெட்டி எடுத்தது போல் உணர்ந்தாள்.

விஸ்வாவின் மன வேதனைகளின் ஆழம் வனிதாவுக்குப் புரியத் தொடங்கியது …

வனிதாவின் விசும்பல்கள் பல நிமிடங்கள் தொடர்ந்தன …

டாக்டர் அமுதா, “சந்திரசேகருடன் உனக்கு இருந்த தொடர்பினால் வந்த பின் விளைவுகளில் நீ எதிர்கொள்ள வேண்டிய முதல் பாதிப்பு இதுதான். அந்த பாதிப்பு, அவன் மனசில் இருக்கும் கோவம், துக்கம், ஏமாற்றம், பரிதவிப்பு இதை எல்லாம் நீ இன்னும் முழுசா புரிஞ்சிக்கலைன்னு நினைக்கறேன். அவனும் அதுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் கவுன்ஸிலிங்கில் கலந்துக்காம இருக்கான். உன்னால் காணாமல் போன மன நிம்மதியை அவனுக்கு திரும்பக் கிடைக்க உதவ வேண்டியது உன் பொறுப்பு இல்லையா? சொல்லு?”

மூக்கை உறிஞ்சி புறங்கையால் துடைத்த வனிதாவின் முகத்தில் எப்போதும் இருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் மறைந்து போயிருந்தன …

வனிதா, “I knew that he was hurt. ஆனா இந்த அளவுக்கு அவரைக் கஷ்டப் படுத்தி இருப்பேன்னு நினைக்கலை”

டாக்டர் அமுதா, “எந்த விஷயத்தையும் மத்தவங்க நிலையில் நம்மை வெச்சுப் பார்க்கும் போதுதான் அந்த விஷயத்தின் ஆழம் புரியும்”

வனிதா, “Will he ever forgive me?”

டாக்டர் அமுதா, “அவனால் நீ செஞ்சதை மறக்க முடியுமான்னு தெரியலை வனிதா. ஆனா சேர்ந்து வாழ்ந்தாலும், பிறிந்து போனாலும் மன்னிப்பதுதான் ஒரே வழி. அப்போத்தான் அவன் மன வேதனைகள் குறையும். அதுக்கு நீ உதவணும்”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.