ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

வனிதா, “ஹூம், சொன்னா அதுக்கப்பறம் விஸ்வா என் மூஞ்சியில் முழிக்க மாட்டார்”

டாகட்ர் அமுதா, “இப்ப மட்டும் தினம் உன் மூஞ்சியில் முழிச்சுட்டு இருக்கானாக்கும்?”

வனிதா, “Oh, please! I don’t need sarcasm. நான் நடந்ததை எல்லாம் சொன்னா என் மேல் அவருக்கு அருவெறுப்பு வரும். என்னை ஒரு எதிரியா பார்க்க ஆரம்பிச்சுடுவார்”

டாக்டர் அமுதா, “வனிதா தவறு செஞ்சவ நீ. அதைப் பத்தின விவரங்களை தெரிஞ்சுக்க விஸ்வாவுக்கு முழு உரிமை இருக்கு. அது மட்டும் இல்லை. நீ இது நாள் வரை மறைச்சதை எல்லாம் வெளிப்படையா சொன்னா இனிமேல் நீ அந்த மாதிரி மறைக்க மாட்டேன்னு விஸ்வா நம்புவான். நீ ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து வாழும் வாய்ப்பு அதிகரிக்கும். யோசிச்சுப் பாரு”

வனிதா தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.

டாக்டர் அமுதா, “நடந்ததை பத்தி சொல்லறதுக்காக நான் உன்னை வரவழைக்கலை. அதனால் ஆன பின் விளைவுகளைப் பத்தி பேச வரச் சொன்னேன். இன்னும் சில நாட்கள் நாம் ரெண்டு பேரும் உன் தகாத உறவினால் வந்த பாதிப்புகளை பத்தி பேசப் போறோம்”

வனிதா, “பின் விளைவு தெரிஞ்ச விஷயம் தானே. விஸ்வா என்னை டைவர்ஸ் பண்ணப் போறார். அவர் இல்லாமல் நானும் என் குழந்தைகளும் பாதிக்கப் படுவோம்”

டாக்டர் அமுதா, “அவ்வளவு சுலபமா சொல்லிட முடியாது. நான் ஒண்ணு கேட்பேன். உன் மனசாட்சிக்கு பொதுவா பதில் சொல்லணும். ஓ.கே?”

வனிதா, “ஓ.கே”

டாக்டர் அமுதா, “நான் சொல்லப் போறதில் நல்லா கவனம் செலுத்தி உன் ஆழ்மனசில் யோசிக்கணும். Think deeply about the scenario I am going to present”

வனிதா, “ம்ம்ம்”

டாக்டர் அமுதா, “Imagine, விஸ்வா சிங்கப்பூருக்கு நிறைய தடவை போயிருக்கான். அங்கே இருக்கும் ஒரு கம்பெனியின் வேலை செய்யும் ஒருத்திகூட விஸ்வாவுக்கு பழக்கம் ஆகுது. அவளுக்கு விஸ்வாவின் அணுகுமுறை, அவன் திறமை எல்லாம் ரொம்ப பிடிச்சுப் போயிடுது, ரெண்டு பேரும் அடிக்கடி ஃபோனில் பேசிக்க வேண்டிய நிலைமை. அவன் சிங்கப்பூர் போகும் போது எல்லாம் ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அவ விஸ்வாவை டின்னருக்கு வரும் படி கூப்பிடறா. முதலில் விகல்பம் இல்லாமல் விஸ்வா போறான். கொஞ்ச நாளில் அவ விஸ்வாவை காதலிக்க ஆரம்பிச்சுடறா. ஒரு நாள் அவனை மயக்கி படுக்கையை பகிர்ந்துக்கறா. கொஞ்சம் கொஞ்சமா விஸ்வாவும் அவளை காதலிக்கத் தொடங்கறான் … ” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே

வனிதா, “ஸ்டாப் இட்” எனக் கூச்சலிட்டாள். அவளது கண்களில் கோபம் கொப்பளித்தது …

டாக்டர் அமுதா, “ஏன் நிறுத்தச் சொல்லறே?”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.