ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

டாக்டர் அமுதா, “டெஸ்டோடரோனின் முக்கியப் பயன் உடலுறவில் ஈடுபடுவதற்குத்தான். ஆனா அதைத் தவிற சில மற்ற பயன்களும் உண்டு. திடகாத்திரமான உடல் இருந்ததால் உடலுறவைத் தவிற டெஸ்டோடரோன் அளவு குறைந்தால் வரும் மற்ற விளைவுகள் எதுவும் விஸ்வாவுக்கு வரலை”

வனிதா மௌனம் காத்தாள் …

டாக்டர் அமுதா, “Communication … வெளிப்படையா பேசுவது. விஸ்வா உனக்கு கணவன் மட்டும் இல்லை உற்ற தோழன் அப்படின்னு நீயே சொல்லி இருக்கே. அப்படி இருந்தும் ஏன் இப்படிப் பட்ட ஒரு மாற்றத்தை நீ அவனுக்கு எடுத்துச் சொல்லலை? அவன் வீட்டில் டாக்டர்களுக்குப் பஞ்சம் இல்லை. எளிதில் இதைக் கண்டு பிடித்து வேண்டிய ட்ரீட்மெண்ட் கொடுத்து இருக்கலாம் இல்லையா?”

வனிதா, “அதற்கு நான் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கலை”

டாக்டர் அமுதா, “பிறகு ஏன் சந்திரசேகரை நாடிப் போனே?”

வனிதா, “நான் ஒண்ணும் … ” என்று தொடங்கி நிறுத்திவிட்டு வெறித்துப் பார்த்த படி இருந்தாள். சில கணங்களில் குலுங்கி அழத் தொடங்கினாள் …

சில நிமிடங்களுக்குப் பிறகு சற்றே சகஜ நிலைக்கு வந்தவள், “இப்போ எப்படி இருக்கார்?”

டாக்டர் அமுதா, “ஹார்மோன் தெரபி கொடுத்துட்டு இருக்காங்க. அனேகமா இப்போ உடல் அளவிலாவது குணமாகி இருக்கணும்”

வனிதா, “உடல் அளவிலாவதுன்னா … ?”

டாக்டர் அமுதா, “வனிதா, தன் மனைவி தன்னைத் தவிற வேறு ஒருவனுடன் உடலுறவு கொண்டால் வரும் மன வேதனைகளில் முக்கியாமானது எது தெரியுமா?”

வனிதா, “எது?”

டாக்டர் அமுதா, “தன் மனைவியை தன்னால் திருப்தி படுத்த முடியலை அப்படிங்கற ஆதங்கம். Inferiority complex … feeling of inadequacy”

வனிதா, “என் விஸ்வா என்னால் அப்படி … ” எனத் தொடங்கியவள் மேலும் எதுவும் பேச முடியாமல் வாய் விட்டுக் கதறினாள்

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.