ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

சில நாட்களுக்குப் பிறகு ஆர்.எஸ்.ஐ க்ளப்பில் டாக்டர் மதுசூதன் அமைத்து இருந்த ஆலோசனை அறையில் மாலை ஆறு மணியளவில் …

டாக்டர் மதுசூதன், “இன்னைக்கு எப்படி இருந்தது உன் வொர்க் அவுட்?”

விஸ்வா, “ஓ! It was good. ஏன் நீங்க இப்பெல்லாம் அங்கே வர்றது இல்லை?”

டாக்டர் மதுசூதன், “ஏன் ஒவ்வொரு முறையும் வந்து உனக்கு வெறுப்பு ஏத்தணும்ன்னு எதிர்பார்க்கறையா?”

வாய் விட்டுச் சிரித்த விஸ்வா, “இல்லை, நடுவில் தொடர்ந்து கவுன்ஸிலிங்க் இருக்கும்ன்னு நினைச்சேன்”

டாக்டர் மதுசூதன், “உனக்கு அந்த பாக்ஸிங்கும் ஒரு கவுன்ஸிலிங்க்தான். ஒவ்வொரு முறையும் சந்திரசேகரை மனசில் நினைச்சுட்டு ரிங்கில் இறங்கு. உன் கோபம் முழுவதா தணியும் வரை பாக்ஸிங்க் தொடரணும்”

விஸ்வா, “கோபம் தணியும்ன்னு தோணலை. ஆனா வொர்க் அவுட் நல்லா இருக்கு”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நீ எப்போ இருந்து வனிதாவைக் காதலிக்கத் தொடங்கினே?”

விஸ்வா, “சின்ன வயசில் இருந்தே”

டாக்டர் மதுசூதன், “எப்போ இருந்து மாஸ்டர்பேட் பண்ணத் தொடங்கினே?” விஸ்வா மௌனம் காக்க, தொடர்ந்து டாக்டர் மதுசூதன், “கம் ஆன், உன் மெடிகல் ரிப்போர்ட்டைப் படிச்சேன். உன் எரக்டைல் டிஃப்ஃபிஷியன்ஸிக்கு (erectile deficiency – எழுச்சி அடையாததற்கு) உன் உடம்பில் இருந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் (Harmonal imbalance) மற்றும் டெஸ்டோடரோன் குறைவும் காரணம். ஆனா, உன் ப்ரிமெச்சூர் எஜாகுலேஷனுக்கு (pre-mature ejaculation – விரைவில் விந்து வெளிப்படுவதற்கு) காரணம் உன் மனம். சின்ன வயசில் இருந்து நீ சுய இன்பம் அடைந்த விதம். You had been a compulsive masturbator .. am I correct?”

விஸ்வா கிசுகிசுத்த குரலில், “எஸ் … ”

டாக்டர் மதுசூதன், “அதில் தப்பு எதுவும் இல்லை விஸ்வா, அந்தப் பழக்கம் நிறையப் பேருக்கு இருப்பதுதான். கல்யாணத்துக்குப் பிறகு கணவன்-மனைவிக்கு இடையே ஒருத்தரின் தேவையை மத்தவர் புரிஞ்சு வெளிப்படையா பேசி உறவு கொள்ளும் போது தானாக அது சரியாயிடும். முதல் முறை மனைவி உச்சம் அடையலைன்னு தெரிஞ்சா மனைவியை ஆழமா காதலிக்கும் எந்தக் கணவனுக்கும் மறுமுறை சரியா செய்யணும்ன்னு தோணும். ஒரு முறை உச்சம அடைந்த பிறகு மறுமுறை எப்படியும் கொஞ்சம் நேரம் ஆகும். சோ, நீ மாஸ்டர்பேட் செஞ்சதை நான் தப்புன்னு சொல்லலை. நான் கேட்க வந்தது வேற. நீங்க ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்ச பிறகும் நீ மாஸ்டர்பேட் செஞ்சுட்டு இருந்தே. இல்லையா?”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.