ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

டாக்டர் அமுதா, “வாவ், டாக்டர்! சத்தியமா சொல்லறேன். நான் இந்தக் கேஸில் நிறைய கத்துக்கப் போறேன். ரொம்ப தாங்க்ஸ்”

டாக்டர் மதுசூதன், “யு ஆர் வெல்கம் … சரி, we digressed, வனிதாவை எப்படி ட்ரீட் பண்ணிட்டு இருக்கீங்க?”

டாக்டர் அமுதா, “முதலில் நீங்க சொன்ன மாதிரி விஸ்வா வேறு ஒருத்தியைக் காதலிப்பது போல யோசிக்க வெச்சேன், நீங்க சொன்ன மாதிரியே ரொம்ப கவலைப் பட்டா. விஸ்வாவின் மனவேதனையை முழுவதுமா புரிஞ்சுட்டு இருக்கா. அடுத்ததா வெறும் செக்ஸ் மட்டும் தான் அப்படிங்கற அவளோட எண்ணத்தை கொஞ்சம் மாத்தி இருக்கேன். அது அவளுக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு. ரொம்ப ப்ரஷர் கொடுத்தா she may break .. ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிடுவா. அது குழந்தைகளைப் பாதிக்கும். அதனால் மென்மையா ஹாண்டில் பண்ணிட்டு இருக்கேன்”

டாக்டர் மதுசூதன், “Excellent … அதே விதத்தில் கண்டின்யு பண்ணுங்க. நான் விஸ்வா தன் மனத்தில் இருக்கும் உள்ளுணர்வுகளை கட்டுப் படுத்தும் நிலை வந்ததும் நீங்க வனிதாவுக்கு சொல்லறதுக்கு நேர் மாறா சொல்லப் போறேன்”

முகத்தில் குழப்பம் தெரிய டாக்டர் அமுதா, “What do you mean?”

டாக்டர் மதுசூதன், “வனிதாவுக்கு சந்திரசேகருக்கும் இருந்த உறவு வெறும் செக்ஸ்தான், அது லவ் இல்லை அப்படின்னு அவனை உணற வைக்கப் போறேன்”

டாக்டர் அமுதா, “அது சரியா?”

டாக்டர் மதுசூதன், “டாக்டர், எதிலும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு … அதைத் தான் அவனுக்கு உணர்த்தப் போறேன். உடலுறவை வெறும் செக்ஸாவும் பார்க்கலாம். காதலுடன் கலந்த ரெண்டு உள்ளங்களில் சேர்க்கையாவும் காணலாம்.”

டாக்டர் அமுதா, “ஆனா, அப்படிப் பட்ட உறவினால் சந்திரசேகருடன் அவளுக்கு நெருக்கம் வரலைங்கறீங்களா?”

டாக்டர் மதுசூதன், “நிச்சயம் நெருக்கம் வந்து இருக்கும் டாக்டர். ஆனா அது கணவனோடு வரும் நெருக்கம் மாதிரி இல்லை. ஒரு நல்ல நண்பனோடு வரும் நெருக்கம் மாதிரி. There would have been a fondness, but not love”

டாக்டர் அமுதா, “பட் … ”

டாக்டர் மதுசூதன், “டாக்டர், உங்களால் இதை ஜீரணிக்க முடியலைன்னு தெரியுது. Please trust me. என் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வையுங்க ப்ளீஸ்”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.