ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

விஸ்வா அவரிடம் அவ்விவரங்களைப் பகிர்ந்து கொண்டதை நினைத்து சில கணங்கள் மனம் பூரித்த வனிதா, “அவரை மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஓட ஊக்குவிச்சேன். அவர் பயிற்சி எடுத்துக்க உதவினேன். ரேஸில் கடைசி ரெண்டு கிலோமீட்டர் கூட ஓடினேன்”

டாக்டர் அமுதா, “அவனே அந்தப் பந்தயத்தில் ஓடணும்ன்னு ஆசைப் பட்டானா?”

வனிதா, “இல்லை. வேலை விஷயத்தினால்தான் அவர் ரொம்ப தன் நம்பிக்கை இழந்து இருந்தார். அவருக்கு காலில் இருக்கும் பிரச்சனை தெரியும். அதையும் மீறி அந்த மாதிரி ஒரு ஓட்டத்தில் கலந்துட்டார்ன்னா அவருக்கு வேறு விதத்தில் தன் நம்பிக்கை வரும்ன்னு நினைச்சு செஞ்சேன்”

டாக்டர் அமுதா, “அப்போ நீ செஞ்சது ரொம்ப சரி. உங்க உடலுறவு குறைந்தப்ப எதனால் அப்படிக் குறைந்ததுன்னு யோசிச்சியா?”

வனிதா, “அவர் வேலை வேலைன்னு இருந்ததால வீட்டுக்கு வரும்போது ரொம்ப டயர்டா வருவார். மூட் இருக்காது”

டாக்டர் அமுதா, “அவனுக்கு மூட் வராததற்கும் உடலுறவில் சரியா கலந்து கொள்ள முடியாததற்கும் வேறு ஒரு காரணமும் இருந்தது”

வனிதா, “வேறு என்ன காரணம்?”

டாக்டர் அமுதா, “அவனுடைய டெஸ்டோடரோன் அளவு குறைஞ்சு இருந்தது”

வனிதா, “எப்படி?”

டாக்டர் அமுதா, “அவனுக்கு அடிபட்டு ஆபரேஷன் செய்த போது கொடுத்த ஸ்ட்ராங்கான ஆன்டி-பயாடிக் மருந்துகளால் இருக்கலாம்ன்னு அவனைப் பரிசோதித்த டாக்டர் சொல்லி இருக்கார்”

வனிதா, “எப்போ இருந்து?”

டாக்டர் அமுதா, “கொஞ்சம் வருஷமாவே குறைய ஆரம்பித்து இருக்கு. ஒரு வருஷத்துக்கு முன்னால் ரொம்ப குறைந்து இருந்திருக்கு”

வனிதா, “இதனால் விஸ்வாவுக்கு உடம்புக்கு எதாவுது?”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.