ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 7 36

டாக்டர் அமுதா, “வாங்க டாக்டர். ஹப்பா! பத்தரை மணின்னா ஒரு நிமிஷம் கூட தவறாம எப்படி உங்களால் இப்படி பங்க்சுவாலிடியை மெயிண்டெயின் பண்ண முடியுது. அதுவும் பெங்களூரில் இப்போ இருக்கும் ட்ராஃபிக்கில் … ”

டாக்டர் மதுசூதன், “வெல்ல்ல் …. பட்டாளத்தில் இருந்தா சில விஷயங்கள் எல்லாம் சாகற வரைக்கும் மாறாது”

டாக்டர் அமுதா, “பட் நீங்க டாக்டரா மட்டும்தானே இருந்தீங்க?”

டாக்டர் மதுசூதன், “அல்மோஸ்ட் முழுக் கெரியரும் ஹாஸ்பிடலில்தான் இருந்தேன். நடுவில் இண்டோ-பாக் வார் சமயத்தில் நானே வேணும்ன்னு வார் ஃப்ரண்டில் போஸ்டிங்க் கேட்டு வாங்கிட்டு போரில் கலந்துகிட்டேன். நேரடிச் சண்டையில் இல்லை … சப்போர்டிங்க் ரோல்தான்…. இருந்தாலும் அந்த அனுபவம் வேற எதிலும் கிடைக்காது. அந்த அனுபவம் என் மனோதத்துவ பயிற்சிக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது”

டாக்டர் அமுதா, “I really admire you Doctor”

டாக்டர் மதுசூதன், “போதும் என் சுய புராணம். நம்ம கேஸுக்கு வருவோம். உங்க சைடில் இருந்து அப்டேட் கொடுங்க”

டாக்டர் அமுதா, “வனிதா முதலில் முறை தவறினது விஸ்வாவின் வேலைக்காகத்தான். ஆனா, அவளுக்கு சின்ன வயசில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தினால் செக்ஸும் லவ்வும் வேற வேறன்னு அவ மனசில் ஆழமா பதிஞ்சு இருந்தது. அந்த நம்பிக்கியினால் அப்படி முறை தவறுவதை அவளால் எளிதா ஏத்துக்க முடிஞ்சுது”

டாக்டர் மதுசூதன், “ஓ! அந்த அனுபவத்தைப் பத்தி விவரமா சொல்லுங்க”

டாக்டர் அமுதா வனிதாவின் சிறு வயதில் நடந்தவற்றை விளக்கினார் …

டாக்டர் மதுசூதன், “இந்த மாதிரி ஒரு விஷயம் நம்ம ஊரில் நடந்து இருந்தா இந்த அளவுக்கு வனிதாவின் மனசு பாதிக்கப் பட்டு இருக்காது”

டாக்டர் அமுதா, “எப்படி சொல்லறீங்க?”

2 Comments

  1. It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .

Comments are closed.