வனிதா, “What ever it takes, என் விஸ்வாவுக்காக நான் என்ன வேணும்ன்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்”
டாக்டர் அமுதா, “உண்மை. அது கசப்பானதா இருந்தாலும் அவனுக்கு நீ சொல்லணும்”
வனிதா, “ஆனா அதனால் விஸ்வா மேலும் வெறுப்பு அடையலாம் இல்லையா?”
டாக்டர் அமுதா, “உன் மேல் வெறுப்பு வரத்தான் செய்யும். உண்மை கசப்பானதுதான் வனிதா. ஆனா உண்மைக்கும் மேல் அவன் மனதில் ஏதோதோ கற்பனை செஞ்சுட்டு மேலும் மனத்தை வறுத்திட்டு இருப்பான். உண்மை தெரிஞ்சா அவன் மனசுக்கு கொஞ்சமாவுது ஆறுதலா இருக்கும் இல்லையா?”
வனிதா, “எஸ்”
டாக்டர் அமுதா, “என்னுடன் பேச அவன் விருப்பப் படாததால் அவனுக்குத் தெரிஞ்ச ஒரு மிலிடரி சைக்கியாட்ரிஸ்ட்கூட பேச வெச்சு இருக்கேன். வெறுப்பு அடையாமல் விஸ்வா உண்மையை எதிர்கொள்ள வைக்க அவர் பொருப்பு எடுத்துட்டு இருக்கார்”
வனிதா, “மிலிடரி சைக்கியாட்ரிஸ்டா? யார் அவர்?”
டாக்டர் அமுதா, “டாக்டர் மதுசூதன் அப்படின்னு ஒருத்தர். இந்தியாவில் ரொம்ப புகழ் பெற்ற மனோதத்துவ நிபுணர்களில் ஒருத்தர்”
வனிதா, “விஸ்வாவுக்கு அவரை எப்படித் தெரியும்? விஸ்வா என் கிட்டே அப்படி ஒருத்தரை தெரியும்ன்னு சொன்னதே இல்லையே?”
டாக்டர் அமுதா, “போரில் கலந்துக்கும் போது, அங்கே நடக்கும் அகோரமான விஷயங்களால் மனம் ரொம்ப பாதிக்கப் படும். அவனுக்கு அடி பட்ட பிறகு ஆர்மி அவரை அவன் கூட பேசச் சொல்லி இருக்காங்க. அனேகமா ஒரு ரொடீன் செக்கப் மாதிரித்தான் இருக்கும். மேற்கொண்டு எனக்கு விவரங்கள் தெரியாது”
வனிதா, “விஸ்வா என் கிட்டே சொல்லவே இல்லையே?”
டாக்டர் அமுதா, “எனிவே, அவனுக்கு பிரச்சனை எதுவும் இல்லை. எதுக்கு உனக்கு ஆதங்கம்ன்னு சொல்லாம இருந்து இருப்பான்”

Endi so nuga
It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .