டாக்டர் அமுதா, “ஓ.கே டாக்டர் … அவங்க ரெண்டு பேரும் எப்படியாவுது ஒன்று சேர்ந்தா போதும்”
டாக்டர் மதுசூதன், “என் குறிக்கோளும் அதுதான்” என்று விடைபெற்றார்
விஸ்வாவின் கைபேசி சிணுங்கியது. அதை எடுத்துப் பார்த்த விஸ்வாவின் முகத்தில் இறுக்கம் தோன்றியது.
விஸ்வா, “சொல்லுங்க சார்”
எதிர்முனையில் டாக்டர் மதுசூதன், “விஸ்வா இன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமாவே மீட் பண்ணலாமா?”
விஸ்வா, “ம்ம்ம் … சாயங்காலம் அஞ்சு மணிவரைக்கும் எனக்கு வேலை இருக்கு சார்”
டாக்டர் மதுசூதன், “ஓ.கே, ஒரு அஞ்சரை மணிவாக்கில் ஏ.எஸ்.ஸி சௌத் கமாண்ட் சென்டருக்கு வர்றியா?”
விஸ்வா, “அங்கே எதுக்கு?”
டாக்டர் மதுசூதன், “வா சொல்றேன். வரும் போது ஒரு டி-ஷர்ட், ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் அப்பறம் உன் ரன்னிங்க் ஷூஸும் எடுத்துட்டு வா”
விஸ்வா, “I guess I can. I really need some work-out. டென்னிஸ் ராக்கட்டும் எடுத்துட்டு வரட்டுமா இல்லை ஜாகிங்க் மட்டும்தான் செய்யப் போறோமா?”
டாக்டர் மதுசூதன், “டென்னிஸ் ராக்கெட் வேண்டாம். என்ன செய்யப் போறோம்ன்னு நீ வந்த பிறகு சொல்றேன்”
விஸ்வா பெங்களூர் ஓல்ட் ஏர்போர்ட் சாலையின் முடிவில், விக்டோரியா ரோடின் தொடக்கத்தில் இருக்கும் ஆர்மி சர்வீஸஸ் கோர் (Army Services Corp) எனும் இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய பிரிவுகளில் ஒன்றின் தென்னிந்திய தலைமையகத்தை அடைந்தான். அதன் வாசலிலேயே கையில் மாற்றுத் துணிக்கான பை எதுவும் இல்லாமல் நின்று இருந்த டாக்டர் மதுசூதனைப் பார்த்ததும் சிறிது துணுக்குற்றான். அவனது கார் கேட்டை நெருங்கியதும் அதில் அவர் ஏறி அமர்ந்து, “நேரா போய் ஃபர்ஸ்ட் ரைட்” என்றார்.

Endi so nuga
It is a long and useful story. Each and everybody should understand the reality and correct themselves. .