துளிர்விடும் பருவம் 127

கல்லூரியில் அவளுக்கு பலர் காதல் கடிதங்கள் கொடுத்தும் ஏற்கவில்லை என்பதால் மீனாட்சியின் மீது அவனுக்கு மரியாதையும் வந்தது.

இது கல்லூரியின் கடைசி வருடம், இப்போதும் காதலை சொல்லவில்லையென்றால் அவளை பிரிய நேரிடும் என்று மணியிடன் உதவி கேட்டுவந்தான்.

“மச்சி எப்பவுமே மோதல்ல ஆரம்பிச்சுதான் காதல்ல முடியும். அதனால அவளோட அழக கொஞ்சம் செக்ஸியா வர்ணிச்சு ஒரு லெட்டர் எழுதிகொடு, மத்தத நான் பாத்துக்குறேன்” என மணி தைரியம் தந்தான்.

ஆரம்பத்தில் ராஜேஷ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், கடைசியில் எந்த வழியும் இல்லை என புரிந்துகொண்டு மணியின் யோசனையை ஏற்று அவன் கைபட அந்த லெட்டரை எழுதி கொடுத்துவிட்டான்.

“ராஜேஷு, அவள உன்னோட காலுல விழுந்து மன்னிப்பு கேக்க வச்சதுதான் கொஞ்சம் ஓவர்டா” என்றான் மணி

“அதுக்கு அந்த பால் டப்பாதான் காரணம்” என்று ரகுவை சொன்னான்.

ரகு வாயை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசுவான். ஆனால் செயலில் இறங்க மாட்டான். சரியான தொடை நடுங்கி.

காதலுக்கு இவனிடம் சென்று உதவிகேட்டால் எதுவும் நடக்காது, அதோடு கடலை போடும் மஞ்சுளாவிடம் உளறிவிடுவான், பிறகு கல்லூரி முழுவதும் தன்னுடைய கெத்து குறைந்துவிடும் என்பதால்தான் மணியிடம் உதவிக்கு வந்தான்.

“இன்னும் அவன் மாறலயா ?” மணி கேட்டான்.

“நீ முதல்ல மாறுனியா, அடி வாங்க வச்சுட்டியேடா பாவி”

“அதெல்லாம் கிடக்கட்டும், சரக்கு வாங்கிதாடா” கூச்சமே இல்லாமல் மீண்டும் கேட்டான்.

ராஜேஷூம் சிகரெட் முடிந்து தூக்கியெறிந்த கையோடு கோபத்தையும் சேர்த்து தூரப்போட்டான்.

“சரி வாங்கித்தறேன், மீனாட்சி, மஞ்சுளா கண்ணுல எதுவும் நீ திரும்ப மாட்டிக்காத” என எச்சரித்தான்.

“இந்த அவுட்டர் பிளேஸுக்கு யாரும் வர மாட்டாங்க மச்சி” என்று தைரியமாக சொன்னதும் இருவரும் சரக்கடிக்க சென்றனர்.

இப்போது ராஜேஷ் கஃபேடாரியாவில் அமர்ந்து, குளிர்பாணத்தை ஸ்ட்ரா வைத்து உறிஞ்சுக்கொண்டிருந்த அதேவேளையில் அருகில் இருந்த ரகு சூடான பாலை பருகிக்கொண்டு மஞ்சுளாவின் வருகைக்காக காத்திருந்தான்.