துளிர்விடும் பருவம் 127

எதிரே இருந்த ராஜேஷுக்கு என்ன சொல்வது என புரியாமல் ரகுவை பார்த்தான்.

ரகு அவளது நெற்றியில் இருக்கும் ஸ்டிக்கர் பொட்டில் ஆரம்பித்து தட்டையான வயிறு வரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்,

“டேய் கேக்குறால, சொல்லுடா” ரகுவின் தலையில் ராஜேஷ் அடித்ததும்தான் சுயநினைவுக்கு வந்தான்.

“சொல்றேன் மாமு, மஞ்சு பால் குடிக்கிறியா ?” என ரகு அவளை பார்த்து வழிந்தான்.

“ரகு…” ராஜேஷ் பற்களை கடித்துக்கொண்டு சொன்னான்.

“இல்ல வேணாம், விஷயம் என்னணு சொல்லுடா”

“சரி நம்ம தல வேற டென்ஷன் ஆகுது, இரு சொல்றேன். மீனாட்சி எங்க ?” ரகு விசாரித்தான்.

“ப்ராஜக்ட் வொர்க் பத்தி லெக்ட்சரர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கா, எதுக்கு கேக்குறே ?”

ராஜேஷ் அமைதியாக அவர்கள் பேசுவதை கவனித்தான்.

“இல்ல சும்மாதான், உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்”

“கேளு”

“நீ லவ் பத்தி என்ன நினைக்குறே ?”

ரகு இதற்கு முன்பே இந்த கேள்வியை மஞ்சுவிடம் கடலை போடும்போது கேட்டிருக்கிறான். ஆனால் அப்போது எதுவும் சொல்லாமல் மழுப்பிவிட்டாள்.