துளிர்விடும் பருவம் 127

“நான் எதுவும் நினைக்கல, நீ எதுக்கு அதெல்லாம் நினைக்குறே ?” என்று எதிர் கேள்விகேட்ட மஞ்சுவிடம் என்ன சொல்வது என புரியாமல் ரகு விழித்தான்.

“சரி, நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் நம்ம ராஜேஷ் இருக்கான்ல”

“இதோ பக்கத்துலதான் இருக்கான்”

“அய்யோ! என்ன கொஞ்சம் பேசவிடேன்”

“ஹ்ம்ம் பேசு” அவளது கருஞ்சிவப்பு உதட்டை அசைத்து மெதுவாக புன்னகைத்தாள்.

அந்த சிரிப்பை பார்த்து ரகு மேலும் வழிய ஆரம்பித்தான்.

“இவனோட கண்றாவியான ரோமான்ஸ பாக்குறதுக்கா நான் வந்தேன்” என்பதை போல் முகத்தை சுழித்தாள் மஞ்சுளா.

“டேய் ரகு, கொஞ்ச நேரம் கம்முனு இரு. நானே பேசிக்குறேன்” பொறுமை இழந்து ராஜேஷ் பேச ஆரம்பித்தான்.

“இவன் சரியான ஜொள்ளு, பேசவே தெரியாது, நீ சொல்லு ராஜேஷ் என்ன விஷயம்”

உடனே ரகுவின் முகம் சுருங்கிவிட்டது. அதை எவருமே கண்டுக்கொள்ளவில்லை.

“நான் மீனாட்சிய லவ் பண்ணுறேன்” மஞ்சுவின் முகத்தை பார்த்து நேரடியாக ராஜேஷ் சொல்லிவிட்டான்.

“வாவ், இட்ஸ் அமேசிங். பொண்ணுங்ககிட்டையே பேசாத ராஜேஷா இது” என மஞ்சு கிண்டல் செய்ய ராஜேஷுக்கு கொஞ்சம் கூச்சம் வந்தது.