துளிர்விடும் பருவம் 124

ஆனால் இன்று வரை காதலில் விழாத அக்மார்க் குடும்பத்து பெண் இந்த மீனாட்சி. அதனாலேயே அவளுக்கு கல்லூரியில் தனி மரியாதை உண்டு.

இப்போது அவள் குளித்து முடித்து தலை துவட்டியபடி, எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்ற ஆரம்பித்தாள்.

“அம்மா இவங்கிட்டலாம் சொல்லிட்டு இருக்க கூடாது, செயல்ல காட்டிடனும்”

ஒரு வாளி நிறைய தண்ணீரை பிடித்து எடுத்துக்கொண்டு மாதவனின் அறைக்கு சென்று அவனது முகத்தில் ஊற்றினாள்.

குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் மாதவன் வெலவெலத்து போனான்.

உச்சந்தலையிலிருந்து நீர் கசிய கோபத்துடன் மீனாட்சியை பார்த்து முறைத்தபடி கட்டிலில் இருந்து எழுந்தான்.

“ஏன்டி, சனியன் புடிச்சவளே, காலங்காத்தால என்னோட உசுர வாங்குறதுக்குன்னே பொறந்து வந்தியாடி”

எப்படியும் கேவலமாகத்தான் திட்டுவான் என்று அவளுக்கு முன்பே தெரியும் என்பதால் அங்கிருந்து வேகமாக ஓட்டமெடுத்து, அவளது அறைக்குள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள் மீனாட்சி.

“போதும் நிறுத்துடா” அம்மா அவனை சமாதானப்படுத்த முயன்றார்கள்.

“நீங்க என்ன அவளுக்கு வாக்காளத்தா ? அவள முதல்ல இங்க வர சொல்லுங்க, நான் இன்னும் நல்லா திட்டனும்” கண்கள் சிவக்க கத்தினான்.

“நானாச்சும் வெந்நீர் ஊத்தலாம்னு நினைச்சேன், அவ பாவப்பட்டு பச்ச தண்ணிய ஊத்திருக்கா. ஒழுங்கா காலேஜ் கிளம்பிபோடா”