துளிர்விடும் பருவம் 127

“ஆமா கிழிச்சே, ஸ்கூல்ல அசிங்கபட்டது பத்தாம திரும்ப உன்கிட்ட வந்தேன் பாரு என் புத்திய செருப்பாலேயே அடிக்கணும்”

“அதவிடு ராஜேஷு இப்படி போட்டு அடிச்சியே ஏதாச்சும் சரக்காச்சும் வாங்கி கொடுடா. வலி தாங்கமுடியலடா” இடுப்பை பிடித்து கொண்டு புலம்பினான்.

“டேய் குஞ்சு மணி, பேசமா கம்முனு இரு அப்புறம் அறுத்து விட்ருவேன்” ராஜேஷ் மிரட்டியதும் வாயை பொத்திக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டான் குஞ்சுமணி என்று அழைக்கபடும் மணிகண்டன்.

மணிகண்டன் ராஜேஷின் பள்ளி தோழன். இருவரும் படிக்கும் போது செய்யாத சேட்டைகள் எண்ணில் அடங்காது.

பள்ளிக்கு வரும்போது மணிகண்டன் ஜட்டி அணியாமல் சென்றதால் குஞ்சுமணி என்று எல்லோறாலும் அழக்கப்பட்டு அது இன்றுவரை தொடர்கிறது.

ராஜேஷ் பள்ளியில் படிக்கும்போது இரண்டு பெண்களிடம் சில்மிஷம் செய்து தந்தையிடம் அடி வாங்கியதற்கும் இந்த மணிதான் காரணம்.

பெண்களின் அங்கத்தில் கை வைத்தால் அவர்கள் உன்னை காதலிப்பார்கள் என்று ராஜேஷிற்கு ஆலோசனை தந்தான்.

அதற்கு ராஜேஷ் பெற்ற தண்டனையை பார்த்ததும், அவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் நண்பன் ஆனான்.

மணிகண்டனுக்கு படிப்பு ஏறாததால் பள்ளியைவிட்டு விலகி ஒரு மெக்கானிடம் தொழில் கற்றுக்கொண்டான்.

இன்று தனியாக ஷாப் ஆரம்பித்து முதலாளியும் ஆகிவிட்டான்.

பள்ளியைவிட்டு நீங்கினாலும் இருவரது நட்பும் இன்றுவரை தொடர்கிறது. அதற்கு காரணம் மணிகண்டன் நட்பிற்காக எதையும் செய்ய துணிந்தவன். அதனால்தான் ராஜேஷின் காதலுக்கு துணை போனான்.

ராஜேஷ் கல்லூரியில் மீனாட்சியை முதன் முதலாக பார்த்ததுமே காதல் வயபட்டுவிட்டான்.

நேரடியாக சென்று காதலை சொன்னால் தன்னுடைய கெத்து போய்விடும் என்று பெண்கள் எவரையும் சீண்டாமல் விட்டுவிட்டான்.