துளிர்விடும் பருவம் 124

“அவனுக்கு சுருட்ட முடியும் இருந்துச்சு” மஞ்சுவும் சேர்ந்து பதில் தந்தாள்.

“எல்லாரும் கேட்டீங்களா, இவ சொன்ன அடையாளத்துல இருக்குறவங்க முன்னாடி வந்து நில்லுங்க” என்றதும் ரகு அதுபோல் இருக்கும் மாணவர்களை வரிசைப்படுத்தினான்.

மீனாட்சியையும், மஞ்சுளாவையும் யாரென்று அடையாளம் காட்டும்படி ராஜேஷ் கட்டளையிட்டதும் அவர்களை பார்த்தனர்.

“இதுல யாரும் இல்ல” ஒரு சேர இருவரும் பதில் தந்தனர்.

“ஹ்ம்ம்… எவனோ ஒருத்தன் என் பேர மிஸ்யூஸ் பண்ணிருக்கான். அவன் யாருன்னு நான் கண்டுபிடிச்சுடுவேன். ஆனா உன்னோட முன்கோபத்தால என்னைய அவசரப்பட்டு அடிச்சுட்டே. உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?”

“பிளீஸ் ராஜேஷ் நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். எந்த ஒரு பொண்ணுக்கும் இப்படிபட்ட லெட்டர் பாத்தா கோவம் வராதா ?” மீனாட்சி கெஞ்சினாள்.

“கோவம் வரலாம் தப்பில்ல, இப்படி அவசரபட்டு அடிச்சது ரொம்ப தப்பு, ரகு இவள என்ன பண்ணலாம் ?”

“நாளைக்கு கிரவுண்ட்ல, உச்சி வெயில்ல முட்டி போட வைக்கலாம்”

“அதுக்கெல்லாம் நேரம் இல்ல, இவளுக்கு நான் இப்பவே ஒரு தண்டனை கொடுக்கணும்”

இந்த கூட்டத்திற்கு முன், தான் அவமானபட்டதை, இப்போதே சரி செய்ய வேண்டும் என ராஜேஷ் யோசித்தான்.

மஞ்சுவும், மீனாவும் தவறு தங்கள் மீது இருப்பது நிரூபணம் ஆகிவிட்டதை உணர்ந்து வாயடைத்து போனார்கள்.

இவளுக்கு ராஜேஷ் என்ன தண்டனை தரப்போகிறான் என கூட்டமே பயத்துடன் பார்த்துக்கொண்டு நின்றது.

“பயப்படாத மீனாட்சி தப்பு உன்மேல முழுசா இல்ல, அதனால உனக்கு குறைந்தபட்ச தண்டனைதான் தரப்போறேன்” ராஜேஷின் பேச்சில் கொஞ்சம் கனிவும் இருந்தது.

“என்ன மாமு அது ?” ரகு கேட்டான்.

“சொல்றேன் வெயிட் பண்ணு, ரகு, மஞ்சுளா ரெண்டு பேரும் போயி ஸ்டூடண்ட்ஸோட நில்லுங்க”