துளிர்விடும் பருவம்

மீனாட்சி எதற்காக இப்படி செய்தாள் என்று ராஜேஷிடம் நேரடியாக கூறமுடியாமல் ரகுவிடம் மட்டும், “ராஜேஷ் அசிங்கமா எழுதி ஒரு லவ் லெட்டர் கொடுத்திருக்கான்” என சொல்லி மஞ்சுளா சமாளித்தாள்.

அருகில் இருந்த ராஜேஷிற்கு விபரம் புரிந்ததும் மீனாட்சி கையில் இருக்கும் லெட்டரை வெடுக்கென்று கோபமாக பிடிங்கி ரகுவிற்கு தெரியாமல் படித்தான்.

“ராஜேஷ் அதுல என்னடா இருக்கு ?” ரகு கேட்டதற்கு பதில் கூறாமல் மீனாட்சியை முறைத்து பார்த்தான்.

“இந்த லெட்டர், நான் உன்கிட்ட வந்து நேரடியா கொடுத்தேனா ?” ராஜேஷ் மிரட்டும் தோணியில் கேட்டதும் மீனாட்சிக்கு கொஞ்சம் பயம் வந்தது.

“இல்ல, நீ கொடுத்தேன்னு சொல்லி ஒருத்தன் தந்துட்டு ஓடிட்டான்”

“இதுல என்னோட நேம் இருக்கா ?”

“இல்ல”

“இது என்னோட கையெழுத்தா ?”

“தெரியாது”

“நான் உன்ன எப்பவாச்சும் தொந்தரவு செஞ்சேனா?”

“இல்லவே இல்ல” ராஜேஷின் கேள்விகளுக்கு பதில்களை தந்துக்கொண்டே இருந்தாள் மீனாட்சி.

“ஸ்டூடண்ட்ஸ், நான் இதுவரைக்கும் எந்த பொண்ணுக்கும் லவ் லெட்டர் கொடுத்துருக்கேனா ?” மாணவர்களின் கூட்டத்தை பார்த்து ராஜேஷ் கேட்டான்.

“கொடுத்தது இல்ல” அந்த இடமே அதிரும் அளவுக்கு பெண்கள் எல்லோரும் பதில் அளித்ததும் மீனாட்சிக்கு தூக்கிவாரிப்போட்டது.

அவசரப்பட்டு ராஜேஷை தெரியாமல் அடித்துவிட்டோம் என்கிற உண்மையை மெல்ல உணரத்தொடங்கினாள்.

தன்னுடைய பெயரை கெடுப்பதற்காக எவனோ விளையாடுகிறான் என்கிற உண்மை விளங்கியதும் ராஜேஷ் நெஞ்சை நிமிர்த்தி பேசத்தொடங்கினான்.

“ஹ்ம்ம்… லெட்டர் கொடுத்தவன் பாக்க எப்படி இருப்பான் ?”

“ஒல்லியா, கருப்பா இருந்தான்” மீனாட்சி தலைகுனிந்து பதில் அளித்தாள்.