ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 36

தாமரை.. நீ போன பின்.. நீண்ட நேரம் நான் சிந்தனை வயப்பட்டேன்.
‘ உன்னைப் போல ஒரு பெண் மனைவியாக அமைந்தால்.. நிச்சயமாக குடும்பம் நன்றாக இருக்கும்..! நீ குடும்பத்தோடு வாழ்ந்தவள் அல்ல… வாழ ஆசைப்படுபவள்..! குடும்பம் என்றால் என்னவென்று புரிந்து வைத்திருப்பவள்..! ஆனால் உன்னை மணக்க எவன் முன் வருவான்..? இவ்வளவு தூரம் உன்னைப் புரிந்து கொண்ட என்னாலேயே.. உன்னை மணக்க முன்வர இயலவில்லையே..? இதை என்னவென்று சொல்வது..?
‘விபச்சாரம் ‘ என்பதன் அர்த்தத்தில்.. நீ பெண்ணென்றால்… நான் ஆண்…! நீ விபச்சாரி..! நான் விபச்சாரன்..!!’
அதற்கு மேல் புறப்பட்டு என் பெரியம்மாவைப் பார்க்கப் போனேன். பெரியம்மா ஊரில் இருந்து வந்திருந்தாள்.
” என்னருந்தாலும்.. உங்கப்பனை ஒரு வார்த்தை கூப்பிடனும்டா..” என்றாள் நான் திருமணம் செய்து கொள்வதாகச் சொன்ன பின்..
” அவன் என்னத்துக்கு இப்ப..?” என்று முறைப்பாகக் கேட்டேன்.
”உன்னைப் பெத்தவன் இலலையா..? இன்னும் செத்துடலையே.. உயிரோடதான இருக்கான்.?”
”என்னைப் பொருத்த வரை அவன்லாம் எப்பவோ செத்துட்டான்..” என்றேன் சூடாக.
”அப்படியெல்லாம் சொல்லாதடா..! பெரியவங்க அருமை உனக்கு புரியல.. ! அவனும் இருந்தாத்தான் சபைல உனக்கும் ஒரு இது இருக்கும்..! அவன நீ ஒன்னும் கூப்பிட வேண்டாம். . பேசாம இரு.. எல்லாம் நாங்க பாத்துக்கறோம்..!!” என்றாள்.
இந்த திருமண விசயம் ஆரம்பித்த பின்னர்.. என் வாழ்வில் எல்லாமே எனக்கு எதிராக நடப்பது போலவே இருந்தது..!
மேகலாவில் தொடங்கி.. நிலாவினியிடம் நான் அவசரப்பட்டது.. இனி நீ என்னைப் பார்க்க வரமாட்டாய் என்று சொல்லி விட்டு போனது.. இப்போது பெற்றவன் தயவு வேண்டும் என்பது..வரை..!! இந்த திருமணம் நடக்குமா…??
அப்பறம் என் அப்பா வரவழைக்கப் பட்டு… குணாவின் வீட்டுக்குப் போய் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தை என்றால் நாள் குறிப்பது.. பத்திரிகை அடிப்பது.. என்கிற விதத்தில்தான்..! ஆனால் நான் என் அப்பாவோடு பேசவே இல்லை. !
குணாவின் வீடு..! வீட்டில் அவனது பைக்கும் இல்லை.. போர்டிகோவில் காரையும் காணவில்லை.! காலிங் பெல்லை அழுத்தினேன். கதவு திறந்தது..! நிலாவினி புடவையில் இருந்தாள். அவள் கண்களைப் பார்க்க முடியாமல்.. பார்வையை மாற்றிக் கொண்டு.. சிரித்து..
”ஹாய்…” என்றேன்.

3 thoughts on “ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6<a href="#" class="jm-post-like" data-post_id="5248" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 36</a>”

Comments are closed.

Scroll to Top