ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”நீங்க இன்னும் தூங்கல..?”
”எங்க தூங்கறது..?” என்றாள் சலிப்புடன்.
”இது என்ன கேள்வி.. உங்க வீட்லதான்..”
”அலோ..! நா சொன்னது அது இல்ல. ..”
” அப்றம்…?”
”இந்த மனுஷன் இன்னும் வல்ல..!”
”ஓ…! எங்க போனாரு..?”
”கடைக்குத்தான்..! ”
”வேலையா இருப்பாரோ… என்னமோ..?”
”ஆமா… அப்படியே கழட்டி ஆறப் போடறாரு… அட ஏங்க நீங்க வேற..?” என்று எரிச்சலோடு பேசினாள்.
சிரித்தேன் ”ரொம்ப டென்ஷனாகாதிங்க..! சரி.. பசங்க. ..?”
”அவங்க..தூங்கிட்டாங்க..”
”சாப்பிட்டிங்களா..? இல்ல அதுக்கும் அவரு வரனுமா..?”
”என்ன கிண்டலா இருக்கா.. என்னைப் பாத்தா…?”
”ஐயோ.. என்னங்க நீங்க என்ன சொன்னாலும் தப்பு தப்பாவே புரிஞ்சுக்கறீங்க…”
”வாய்ல சனி இருக்கில்ல..? அப்படித்தான் இருக்கும்.! சரி.. நீங்க சாப்பிட்டாச்சா..?”
”ஓ..!”
” அக்கா வீட்லயா…?”
”ம்.ம்..!!”
”புதுமாப்பிள்ளை… ஒரே கவனிப்பா இருக்கும்…?”
”ஹ்ஹா… இருக்காதா.. பின்னே…?”
”ஹூம்..” என பெருமூச்செறிந்தபடி புடவைத் தலைப்பை இழுத்து போர்த்தினாள்.
”ஏங்க புதுப்பொண்ணா இருந்தப்ப.. உங்களக்கூடத்தான் கவனிச்சிருப்பாங்க… ஸ்பெஷலா…” என்றேன்.
”க்கும்..” என முக்கினாள்.
”ஏங்க கவனிக்கலியா…?”
”அட…சும்மாருங்க.. கொஞ்சம். பழசெல்லாம் கெளறி.. மனுஷிய நோகடிக்காதிங்க..”
”ஸாரி..! கவனிக்கவே இல்லையா..?”
என்னை முறைத்தாள். நான் சிரித்தேன்.
”சரி விடுங்க.. இப்பத்தான் மூர்த்தியண்ணா கவனிச்சுக்கறாரே..?”
”ஆஹா… அப்படியே உங்க மூர்த்தி அண்ணா கவனிச்சிட்டாலும்…?”
” ஏங்க.. இதவிட என்னங்க கவனிக்கனும்.. உங்கள ராணி மாதிரி உக்கார வெச்சு பாத்துக்கறாரில்ல…?”
”ஆமா.. இப்படி கவனிச்சா… அப்பறம் பொண்டாட்டிய காக்காதான் வந்து கொத்திட்டு போகும்…” என்றாள்.
”என்னங்க… சம்பந்தா.. சம்பந்தமில்லாம பேசறீங்க..?”
”பின்ன… இப்படி நடு ராத்திரிக்கு மேல குடிச்சிட்டு வந்தா.. பொண்டாட்டிய.. காக்காகூட கொத்திப் பாக்கத்தான் செய்யும்..”
”ஓ..!” பொடி வைத்துப் பேசுகிறாளோ..? ”ஜாடையா பேசற மாதிரி இருக்கு..” என்றேன்.
”ஜாடையாவா..?”
”ம்..ம்..”
” உங்கள அப்படியெல்லாம் பேச முடியுமா..? பொதுவா சொன்னேன்..” என சமாளித்தாள்.
”ரொம்ப..சரி..!!” சிரித்தேன் ”நீங்க வடையா.. என்ன. .?”
”என்ன..?” புரியாமல் பார்த்தாள்.
”காக்கா வந்து கொத்திட்டு போக… நீங்க வடையா.. என்ன..?”
”ஆஹா…”
அவளது கணவன் வரவே இல்லை. நேரம் கூடிக்கொண்டே போனது.
”மணி பாருங்க…”என்றாள்.
பார்த்தேன். பத்தரை.!
”பத்தரை..” என்றேன்.
” என்ன மனுஷன் இவரு..? இப்படி பண்ணா நான் என்னதான் பண்றது..?”
”பேசாம போய்… படுத்து தூங்குங்க..! வருவாரு இல்ல..?”
” வந்துருவாரு…. ஆனா. .. அவரு வீடு வர்றவரை எனக்குத்தான் தூக்கமே வராது..”
”நெஜமாவா…?”
”என்னை பாத்தா பொய் சொல்றவளாட்டமா தெரியுது..?”
” இ…இல்ல… இத்தனை வருசம்.. ஆகியும்…?”
”ஏன்… இத்தனை வருசம் ஆனா.. என்ன…?”
” இ..இல்ல..! ஆனா… அவருதான்.. உங்க பாசத்த புரிஞ்சுக்கவே இல்லை போலருக்கு…”
”அப்படி சொல்லாதிங்க..! மனுஷன் என்னதான் குடிச்சாலும்…அடிச்சாலும்.. என்மேல பாசமாத்தான் இருக்காரு..!”என்றாள்.
”அதுசரி… புருஷன் என்னதான் பண்ணாலும்.. இந்த பொண்டாட்டிக மட்டும் விட்டுத் தரவே மாட்டிங்களே..” என நான் சொல்ல அவளுக்கு பொசுக்கென கோபம் வந்து விட்டது.
”எதுக்கு விட்டுத்தரனும்.. நீங்க நெனைக்கற மாதிரி ஒன்னும் அவரு மோசமானவர் இல்லே… அதத் தெரிஞ்சுக்கோங்க மொதல்ல..” என்றாள்.
இவளே தன் கணவன் பற்றி என்னிடம் குறை சொன்னதுண்டு. .! ஆனால் இப்போது…?? இவள் கணவன் சொன்னது போல…
‘இந்த பொம்பளைங்களே.. ஆகாதப்பா.. !!’
”சரிங்க மேடம்…! நீங்க சொல்றதுதான்..சரி..” என்றேன்.
லேசாக முறைத்துப் பார்த்தாள். பின்..
”உங்கள ஒன்னு கேக்கனும்…” என்றாள்.
”ம்..ம்.. கேட்றுங்க…?”
”உங்க.. கல்யாணம்.. லவ்வா..?”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.