ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

சேல்ஸ் மேனேஜர், “எஸ்”

வனிதா, “அந்த ப்ராடக்ஸுக்குத் தேவையான உபரிப் பொருட்களை வாங்கும் போது அந்த ஜாப்பனீஸ் கம்பெனி நமக்கு எந்த க்ரெடிட்டும் கொடுப்பது இல்லை. முழுக்க முழுக்க நம் கைப் பணத்தைப் போட்டு தயாரிச்சு அதை க்ரெடிட்டில் விக்கறோம்”

விஸ்வா, “மாசக் கடைசியில் பேங்குக்குப் போகக் கூடாது. I agree. இருந்தாலும் க்ரெடிட் கொடுக்கலைன்னா எவ்வளவு மிச்சம் படுத்த முடியும்?”

வனிதா, “திட்டமிடாத உபரிச் செலவுகளைக் குறைக்கணும்ன்னு தினக் கூலி ஆட்களை எடுக்கக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தோம். இருந்தாலும் சில நாட்களில் ஷிப்மெண்ட்ஸ் ஜாஸ்தியா இருக்கும் போது ஆள் பலம் இல்லாம கஷ்டப் படறதா ஃபேக்டரி மேனேஜர் எத்தனையோ தரம் முறையிட்டு இருக்கார்”

விஸ்வா, “அதுக்கும் க்ரெடிட் கொடுக்காம இருக்கறதுக்கும் என்ன சம்மந்தம்?”

வனிதா, “நாம் பேங்குக்குக் கட்டும் வட்டிப் பணத்தில் தேவையான ஆட்களை தேவையான சமயங்களில் தினக் கூலிக்கு எடுத்துக்கலாம். இல்லைன்னா, அப்படி தினக் கூலியில் எடுப்பதற்கு பதிலா முழு நேர வேலைக்கே இன்னும் பத்து பேரை எடுக்கலாம்”

அங்கு இருந்த ப்ரொடக்ஷன் மேனேஜரின் முகம் மலர்ந்தது …

வனிதா யோசிக்கும் கோணத்தையும் அதை அவள் விளக்கிய விதத்திலும் வியந்து ஒரு நிமிடம் பேச்சற்று தன் வாழ்க்கைத் துணையின் அறிவுக் கூர்மையில் லயித்தான் …

அவன் கண்களை கூர்ந்து நோக்கிய வனிதா, “சோ?”

விஸ்வா சுதாரிக்க சில கணங்கள் ஆகின ..

விஸ்வா, “சரி, பர்சேஸ் பாலிஸியைப் பத்தி என்ன பேசணும்?”

வனிதா, “புது ஃபேக்டரியில் உற்பத்தி செய்யும் மாஸ் வேயிங்க் ஸ்கேல்ஸுக்குத் தேவையான உபரிப் பொருட்கள் வாங்கறதைப் பத்தி”

விஸ்வா, “கஸ்டமர்கள் கிட்டே நாம் க்ரெடிட் கொடுக்க முடியாதுன்னு சொல்லலாம். ஆனா நம் ஜாப்பனீஸ் பார்ட்னர்ஸ் கிட்டே க்ரெடிட் கொடுன்னு கேட்க முடியாது. அட்வான்ஸ் கொடுத்து பொருட்களை வாங்கறதா ஒப்புதல் கொடுத்து இருக்கோம்”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.