மதன மோக ரூப சுந்தரி – 5 15

அறையை அடைந்ததும் கதவை சாத்தி தாழிட்டாள்.. உடுத்தியிருந்ததை களைந்துவிட்டு வேறு உடை அணிந்துகொள்ள ஆரம்பித்தாள்..!! சந்தன நிறத்து ப்ராவால் தனது மார்பழகை மறைத்து மூடியவள்.. இரண்டு கைகளையும் பின்பக்கம் செலுத்தி ஹூக் மாட்ட முயன்றாள்..!! ப்ரா மிகவும் இறுக்கமாக இருந்தது.. கொக்கியை கோர்க்க கஷ்டப்பட வேண்டியிருந்தது.. ‘அடுத்த சைஸ் மாத்தணும்’ என்று வாய்க்குள்ளே முனுமுனுத்தாள்..!! உதட்டை அழுத்தி கடித்துக்கொண்டு.. உடம்பை சற்றே முன்னுக்கு தள்ளி.. முகத்தை நிமிர்த்தி மேலே பார்த்தவாறு.. ஹூக்கை மாட்டிக்கொள்ள முயன்றவள்.. ஒருகணம் அப்படியே உறைந்துபோய் நின்றாள்..!!

எதேச்சையாகத்தான் அவளுடைய பார்வையில் அது பட்டது.. அலமாரியில் நீட்டிக்கொண்டிருந்த அந்த புத்தகம்.. அன்று தாமிராவின் அறையில் இருந்து எடுத்துவந்திருந்த புத்தகம்.. கருப்பு அட்டையுடனும், ‘கண்ணாமூச்சி ரே ரே’ என்கிற தலைப்புடன்..!! அன்று அந்த புத்தகத்தின்மீது சிந்திய சிவப்பு மை.. அதன் அட்டையில் விரவி, இப்போது காய்ந்துபோய் காட்சியளித்தது..!! அன்று ஏனோ ஆதிராவின் கவனத்தை அது கவரவில்லை.. இன்று கவர்ந்தது.. அந்த சிவப்புமையின் பரவல், சீரான ஒரு ஓவியமாக அவளுக்கு தோன்றியது..!!

ஹூக்கை மாட்ட மறந்துபோய், கையை நீட்டி அந்த புத்தகத்தை எடுத்தாள்.. அட்டையின் மீது கூர்மையாக பார்வையை வீசினாள்..!! ஏதோ ஒரு மலருடைய இதழ்களைப்போல.. மை அந்த அட்டையில் படர்ந்திருந்தது.. சற்றே வித்தியாசமான இதழமைப்பு கொண்ட ஒரு மலர் எனலாம்..!! அதைப் பார்த்ததுமே ஆதிராவின் மூளைக்குள் சுருக்கென்று ஒரு மின்னல் வெட்டு..!!

‘இந்த மாதிரியான இதழமைப்பு கொண்ட மலரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே..?? எங்கே..??’

என்கிற ரீதியில் மனதுக்குள்ளேயே பேசியவள்.. தனது நெற்றியைப் பற்றி பிசைந்து கொண்டாள்.. நினைவுக்கு கொண்டுவர முயன்றாள்..!! ‘எங்கே.. எங்கே.. எங்கே..’ என்று திரும்ப திரும்ப கேள்விகேட்டு.. தனது மூளையை தட்டியெழுப்பி சுறுசுறுப்பாக்கி.. மறந்துபோனதை மனதுக்குள் எடுத்துவர முயன்றாள்..!!

“டக்.. டக்.. டக்.. டக்..!!” – அறைக்கதவு அவ்வாறு தட்டப்பட்டதும் ஆதிராவுக்கு கவனம் கலைந்து போயிற்று.

“யாரு..??” என சற்று எரிச்சலாகவே கேட்டாள்.

“நாந்தான்க்கா..!!” – அறைக்கு வெளியிருந்து தென்றலின் குரல்.

“ம்ம்.. சொல்லு..!!”

“ரூம் கிளீன் பண்ணனும்க்கா..!!”

“ஓ.. ஒருநிமிஷம் இரு..!!”

“சரிக்கா..!!”

ஆதிரா அந்த புத்தகத்தை மீண்டும் அலமாரியிலேயே வைத்தாள்.. அவசர அவசரமாய் ஹூக் மாட்டிக் கொண்டாள்.. ஆரஞ்சு நிறத்திலான அந்த பட்டுப்புடவையும், அதற்கு பொருத்தமானதாய் ஒரு ரவிக்கையும் அணிந்துகொண்டாள்..!! அவளது கூந்தலை இன்னும் பூந்துவாலை சுருட்டியிருக்க.. அப்படியே நடந்து சென்று கதவை திறந்தாள்..!! கதவு திறந்து வெளியே பார்வையை வீசியவளின் முகத்தில்.. உடனே ஒருவித ஆச்சர்யம் கலந்த பூரிப்பு..!!

வெளியே தென்றல் நின்றிருந்தாள்.. என்றுமில்லாத ஒரு புதுவித அழகுடன் இன்று ஜொலிஜொலித்தாள்..!! இளமஞ்சள் நிறத்தில் புடவை.. நேர்த்தியாக பின்னப்பட்ட கூந்தல்.. பவுடர் போட்டு பளிச்சென்றிருந்த முகம்.. லிப்ஸ்டிக் தீட்டி பளபளத்த உதடுகள்.. கை, கழுத்து, காதில் எல்லாம் புதிதாய் அணிகலன்கள்..!! இப்போதுதான் மொட்டிலிருந்து அவிழ்ந்துகொண்ட மலர்போல.. புத்துணர்வோடும், புதுப்பொலிவோடும் தோற்றமளித்தாள்..!!

“வாவ்…!!!!!” வாய்விட்டே ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாள் ஆதிரா.

“என்னக்கா..??” தென்றல் புரியாதவளாய் கேட்டாள்.

“சூப்ப்ப்ப்பரா இருக்குற தென்றல்..!!!”

“ஹையோ.. போங்கக்கா..!!” – தென்றலிடம் இப்போது ஒரு வெக்கம்.

“ஹேய் நெஜமாத்தான்.. அப்படியே ஜொலிக்கிற போ..!! ம்ம்ம்ம்ம்ம்… ஸேரி ரொம்ப அழகா இருக்கு..!! புதுசா..??”

“ஆமாம்க்கா..!! அண்ணன் இப்போ ஊர்ல இருந்து வர்றப்போ வாங்கிட்டு வந்தான்..!!”

“ஓ..!! நல்லாருக்கு.. உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு..!!”

“தேங்க்ஸ்க்கா..!!”

“ஹ்ம்ம்..!! கதிருக்கும் தங்கச்சி மேல ரொம்ப பாசம்தான் போல..??”