மதன மோக ரூப சுந்தரி – 5 15

“……………………………………”

“ஆனா சும்மா சொல்லக்கூடாது.. எனக்கு நாலஞ்சு நாள் செம கம்பனி குடுத்தா..!! வாழணும்னு அவ்வளவு ஆசை.. உசுரை விட்டுடாம அஞ்சுநாள் இழுத்துட்டு கெடந்தா..!! ஹாஹா..!!”

மணிமாறனின் வார்த்தைகளில் புதைந்திருந்த குரூரம், ஆதிராவை வெடவெடக்க வைத்தது.. அவளது இதயத்துடிப்பின் வேகம், இப்போது எக்கச்சக்கமாய் ஏறிப்போயிருந்தது..!!

“பாக்கலாம்.. நீ எத்தனை நாள் தாக்குப்பிடிக்கிறன்னு..!!” இளிப்புடன் சொல்லிக்கொண்டே, ஆதிராவின் புஜத்தை பற்றி தூக்கினார்.

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

மிரண்டுபோய் சப்தம் எழுப்பிக்கொண்டே, விழுக்கென்று துள்ளி, அவரது பிடியில் இருந்து நழுவினாள் ஆதிரா.. மணிமாறனின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.. உதட்டில் ஒரு மிருதுவான புன்னகையை கசியவிட்டவாறே, புறங்கையை வீசி, ஆதிராவின் கன்னத்தில் ‘ரப்ப்ப்..’பென்று ஒரு அறைவிட்டார்..!! அவ்வளவுதான்.. ஆதிரா சுருண்டுபோய் தரையில் வீழ்ந்தாள்..!!

வீழ்ந்தவளை அள்ளி நாற்காலியில் விசிறினார்.. அவளது எதிர்ப்பு இப்போது வெகுவாக குறைந்து போயிருந்தது.. உடலின் சக்தி உறிஞ்சப்பட்டவளாய் சோர்ந்துபோய் காட்சியளித்தாள்.. மயக்கம் வருவதுபோல அவளுக்குள் ஒரு உணர்வு..!! நிலைகொள்ளாமல் தள்ளாடிய தலையை திருப்பி.. அருகில் நின்ற மணிமாறன் என்ன செய்கிறார் என்று பார்த்தாள்..!!

அந்த மரமேஜையின் மீது இரண்டு ட்ரேக்கள் இருந்தன.. அந்த இரண்டு ட்ரேக்கள் நிறையவும் கூர்தீட்டப்பட்ட சில கருவிகள்.. ஆணிகள், ஊசிகள், உளி, குறடு, கத்தி, சுத்தியல், அரம், திருப்புளி..!! எதைத் தேர்வு செய்யலாம் என்பது போல எல்லாவற்றையும் தடவிப்பார்த்த மணிமாறன்.. பிறகு அந்த உளியை கையில் எடுத்துக்கொண்டு, ஆதிராவின் பக்கமாக திரும்பினார்..!! அவளுக்கோ முதுகுத்தண்டில் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!” பதறியடித்து துள்ளினாள்.

மணிமாறன் அவளுடைய கழுத்தை கொத்தாகப் பற்றினார்.. நாற்காலியோடு சேர்த்து அவளை அழுத்தி பிடித்தார்.. நகரமுயன்ற அவளது கால்களை, தனது காலால் மிதித்து நசுக்கினார்..!! ஆதிரா குலைநடுங்கிப் போனாள்.. அவளது இமைகள் மிரண்டுபோய் விரிந்துகொண்டன.. அவளது மார்புகள் ரெண்டும் ‘சர்ர் சர்ர்ர்’ரென்று விம்மி பதறின..!!

“என்ன இது.. சின்னப்புள்ள மாதிரி.. எங்க ஓடிறலாம்னு நெனைக்கிற..?? ம்ம்..??”

மணிமாறன் சொல்லிக்கொண்டே அந்த உளியை அவளது கண்ணுக்கருகே கொண்டுசெல்ல.. ஆதிரா படக்கென இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.. ‘ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்..’ என்று முனகினாள்.. மூச்சிரைத்தாள்.. துடித்தாள்..!!

மணிமாறன் இரண்டு விரல்களால் ஆதிராவின் இமைகளை விரித்து பிடித்தார்.. வேறு வழியில்லாமல் திறந்துகொண்ட அவளது விழிக்கருகே உளியை நீட்டினார்.. நெருக்கமாக கொண்டு சென்றார்..!! பீதி நிறைந்திட்ட ஆதிராவின் கருவிழி.. கூர் தீட்டப்பட்ட பளபளப்புடன் அந்த சிறுஉளி.. இரண்டுக்கும் இடையே சில மில்லி மீட்டர்களே இடைவெளி..!!

“உனக்கும் தாமிராவுக்கும் ஒரே மாதிரியான கண்ணு.. நல்லா பெருசா.. அழகா.. கோலிகுண்டு மாதிரி..!!”

கருவிழிக்கு வெகுஅருகே நீட்டப்பட்டிருந்த உளியை, ஆதிரா மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. அவளது நாசிக்கருகே சட்டென அந்த வாசனை மாற்றத்தை உணர்ந்தாள்.. அத்தனை நேரம் அந்த அறையை நிறைத்திருந்த துர்நாற்றம் நீங்கி, சரசரவென ஒரு இனிய நறுமணம் அங்கே பரவுவதை, உடனடியாக அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. அது.. அந்த வாசனை.. மனதை மயக்குகிற மகிழம்பூவின் வாசனை..!!