மதன மோக ரூப சுந்தரி – 5 15

அன்று இரவு.. ஆறுதல் சொல்ல வந்திருந்தவர்கள் எல்லாம், ஆதிராவையும் சிபியையும் தனியாக விட்டுச்சென்ற பிறகு.. வில்லாளனிடம் இருந்து சிபியின் செல்ஃபோனுக்கு அழைப்பு வந்தது..!! காலையில் தான் நடந்துகொண்ட விதத்திற்காக.. முதலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் வில்லாளன்..!!

“ஸாரி.. மார்னிங் நான் ரொம்ப டென்ஷன்ல இருந்தேன்.. கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்னு நெனைக்கிறேன்..!! அவங்க அல்ரெடியே ரொம்ப ஷாக்ல இருக்காங்கன்னுகூட நான் யோசிக்கல..!!”

“ம்ம்.. பரவால ஸார்.. இட்ஸ் ஓகே..!!”

“இப்போ எப்படி இருக்காங்க..??”

“ஷீ இஸ் ஆல்ரைட் நவ்..!!”

“குட்..!! அப்புறம்.. அவங்க தங்கச்சி தாமிரா பத்தி எனக்கு கொஞ்சம் டீடைல்ஸ் வேணும்..!!”

“என்ன..??”

“அந்தாள் வீட்டு தோட்டத்துல.. இதுவரைக்கும் எங்களுக்கு ஒரு பதினஞ்சு டெட்பாடிஸ் கெடைச்சிருக்கு.. எல்லாத்தையும் ஐடண்ட்டிஃபை பண்ற வேலை போயிட்டு இருக்கு..!! அதுல தாமிராவோட டெட்பாடியும் இருக்கான்னு கன்ஃபார்ம் பண்ணனும்..!!”

“ஓ..!! என்ன டீடைல் வேணும்னு சொல்லுங்க..!!”

“காணமப்போனப்போ அவங்க லாஸ்டா போட்ருந்த ட்ரஸ்.. கை கால்ல போட்ருந்த ஜ்வல்ஸ்.. அப்புறம் அவங்களோட பழைய மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எதாவது இருந்தா வேணும்..!!”

“தாமிரா காணாமப்போனப்போ குடுத்த கம்ப்ளயின்ட்லயே இதெல்லாம் குடுத்திருக்கோமே..??”

“ஓ.. ஆமால்ல..!! அப்போ சரி.. அந்த கேஸ் ஃபைலையே நான் ரெஃபர் பண்ணிக்கிறேன்..!!”

“ஓகே..!!”

“அப்புறம்.. இன்னொரு விஷயம்..”

“சொல்லுங்க..!!”

“அகழில இருக்குறது உங்களுக்கு ஸேஃப் இல்லைன்னு தோணுச்சுனா.. நீங்க தாராளமா மைசூர் கெளம்பலாம்..!! ஆனா.. எங்க இன்வெஸ்டிகேஷன்க்கு தேவைப்படுறப்போலாம்.. அவங்க கோவாப்ரெட் பண்ணனும்..!! எய்தர்.. ஃபோன்லயா இருக்கலாம்.. சிலநேரம் நேர்லயும் வர்ற மாதிரி இருக்கலாம்..!!”

“ஓகே ஸார்.. அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!”

“தேங்க்ஸ்..!!”

பதிலுக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு காலை கட் செய்தான் சிபி.. படுக்கையில் கிடந்த மனைவியுடன் தானும் சேர்ந்து கொண்டான்.. வெகுஇயல்பாக மிகமிருதுவாக அவளை அணைத்துக் கொண்டான்..!! கணவனின் கதகதப்புக்குள் அடங்கியவாறே கேட்டாள் ஆதிரா..!!

“என்ன சொல்றார்..??”

“மேலருந்து டோஸ் விட்ருப்பாங்க போல.. காலைல அவ்வளவு பேசுனவரு, இப்போ பம்முறாரு..!!”

“ஓ..!!”

“மைசூர் போறதா இருந்தா, போங்கன்னு சொல்றாரு.. தேவைப்படுறப்போ மட்டும் வந்தா போதுமாம்..!!”

“ம்ம்..!!”

“கெடைச்ச டெட்பாடிஸ்ல தாமிராவோட டெட்பாடி இருக்கான்னு கன்ஃபார்ம் பண்ணனுமாம்.. தாமிரா பத்தின டீடயில்ஸ் கேட்டாரு..!! நான், பழைய கேஸ்ஃபைலை பாத்து தெரிஞ்சுக்கங்கன்னு சொல்லிட்டேன்..!!”

அவ்வளவுநேரம் ஓரிரு வார்த்தைகளாவது உதிர்த்துக் கொண்டிருந்த ஆதிரா.. இப்போது அதுவுமில்லாமல் அமைதியாகிப் போனாள்..!! ஒருநாள் முழுவதும் வற்றிப்போயிருந்த தங்கையின் நினைவுகள்.. இப்போது மீண்டும் வந்து அவளது நெஞ்சை அடைத்துக்கொண்டன..!!

“என்னாச்சு ஆதிரா.. சைலண்ட் ஆயிட்ட..??”

“அ..அந்த ஆளு..”

“அந்த ஆளு..??”

“அ..அந்த ஆளு.. தாமிராவைப் பத்தி எதோ சொல்ல வந்தான் அத்தான்..!!”

“ஓ…!!”

“தாமிராவை எப்படிலாம் டார்ச்சர் பண்ணினான்னு சொல்ல வந்திருப்பான் நெனைக்கிறேன்..!!”

“ம்ம்..!!”

“அந்தாளுக்கு எப்படிப்பட்ட வல்கர் புத்தி தெரியுமா..?? எவ்வளவு கூலா.. க்ரூயலான வேலைலாம் பண்ணினான் தெரியுமா..?? நெனச்சுப் பாக்கவே திக்குன்னு இருக்குது..!! தாமிராவை அந்தாளுதான் கொன்னுட்டானா அத்தான்..??”

“ம்ம்.. அப்படித்தான் இருக்கனும்..!!”

“என் தங்கச்சி பாவம் அத்தான்.. கள்ளங்கபடம் இல்லாதவ.. யாருக்கும் எந்த கெடுதலும் நெனைக்காதவ..!! அ..அவ.. அவ ஒரு பூ மாதிரி அத்தான்.. அந்தாளுட்ட சிக்கி எப்படியெப்படிலாம் சித்திரவதை அனுபவிச்சாளோ..??” சொல்லும்போதே ஆதிராவின் கண்களில் பொலபொலவென கண்ணீர் கொட்ட, சிபி பதறிப்போனான்.

“ஹேய்.. ஆதிரா.. என்ன இது.. கண்ணை தொடைச்சுக்கோ.. ஃபீல் பண்ணாத ப்ளீஸ்..!!”

“ம்ம்..!!”

“நடந்து முடிஞ்சதை நெனைச்சு கவலைப்படாத ஆதிரா.. நடக்கப் போறதை பத்தி நெனை..!!”

“ம்ம்..!!”

“இந்தக் கஷ்டத்துல இருந்து எப்படி நார்மலுக்கு திரும்பலாம்னு யோசி..!!”

“ம்ம்..!!”

“தாமிராவோட டெட்பாடியை உனக்கு பாக்கணுமா..??”

“இல்லத்தான்.. என் தங்கச்சியை அந்தமாதிரி கோலத்துல என்னால சத்தியமா பாக்கமுடியாது.. என் மனசுல அந்த தெம்பு இல்ல..!! போலீஸா பார்த்து கன்ஃபார்ம் பண்ணட்டும்.. நான் பாக்க வரமாட்டேன்..!!”

“அப்போ.. நாளைக்கு காலைலயே மைசூர் கெளம்பிறலாமா..??”

“ம்ம்.. கெளம்பிறலாம்..!!”

“உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே.. அகழில இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்ட..??”

“இல்லத்தான்.. அந்த ஆசைலாம் எப்போவோ போய்டுச்சு..!! இந்த அஞ்சாறு நாள் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் அத்தான்.. இங்க வந்ததுல இருந்தே எதுவும் சரியில்ல.. நாம மைசூருக்கே போயிறலாம்..!! உண்மையிலேயே தாமிராவுக்கு என்னாச்சுனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.. அதுவும் இப்போ தெரிஞ்சு போச்சு.. போதும்.. கெளம்பிறலாம்..!!” பரிதாபமாக சொன்ன ஆதிராவை ஏக்கமாக ஏறிட்டான் சிபி.