“ஐயோ.. விடுங்கத்தான்.. காலங்காத்தாலேயே..??”
“ஏன்.. காலங்காத்தால ரொமான்ஸ் பண்ணக்கூடாதா..?? ஏதாவது சட்டம் போட்ருக்காங்களா..??”
“ம்ம்..?? நைட்தான எல்லாம் ஆச்சு.. அப்புறம் என்ன.. காலைலேயே..??”
“நைட் நல்லா சாப்பிட்டுட்டுத்தான் தூங்குறோம்.. காலைல எழுந்ததும் பசிக்கிறது இல்லையா..?? அந்த மாதிரித்தான்..!!”
“ஓஹோ.. லாஜிக்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா.. இதுக்குலாம் இப்போ டைம் இல்ல.. கோயிலுக்கு கெளம்பனும்..!!”
“கெளம்பலாம் கெளம்பலாம்..!! அதுக்கு முன்னாடி.. வீட்லயே ஒரு ஸ்பெஷல் தரிசனம் பார்த்து, அர்ச்சனைலாம் முடிச்சுட்டு அப்புறமா கெளம்பலாம்..!!” சிபி போதையாக சொல்லிக்கொண்டே, ஆதிராவின் உள்பாவாடையை உயர்த்த முயல,
“ச்சீய்ய்ய்ய்..!!!” அவனுடைய கையை பட்டென தட்டிவிட்டாள் ஆதிரா.
“விடுங்கத்தான்.. நான் போகணும்..!!” என்று கெஞ்சினாள்.
“ம்ஹூம்..!! அதுக்குலாம் நீ சரிப்பட்டு வருவியான்னு பாக்காம.. இன்னைக்கு உன்னை வெளில அனுப்புறதா இல்ல..!!”
“எதுக்குலாம் சரிப்பட்டு வருவனா..??”
சிபி இப்போது ஆதிராவின் காதருகே ஏதோ கிசுகிசுக்க, அவள் அப்படியே முகத்தை சுளித்தாள்.
“ஐய்ய்ய்ய்யோ.. கருமம்..!!!!!”
“வா.. ட்ரை பண்ணிப் பாக்கலாம்..!!”
“இப்போ விடப் போறீங்களா இல்லையா..??” ஆதிரா சற்று கடுமையாக கேட்டாள்.
“சான்ஸே இல்ல..!!” சிபி பிடிவாதமாக இருந்தான்.
கணவனின் செய்கையில் கடுப்பாகிப்போன ஆதிரா.. இப்போது தனது கைகளில் ஒன்றை நீட்டி.. சுவற்றோடு பொருந்தியிருந்த அந்த குமிழை பிடித்து சரக்கென திருகினாள்.. உடனே ஷவரில் இருந்து சர்ர்ர்ரென நீர் பீய்ச்சியடித்தது..!! ஆதிராவை கதகதப்பாக அணைத்துக்கொண்டிருந்த சிபியின் முதுகில்.. சடசடசடவென குளிர்ந்தநீர் கொட்டவும்.. ‘ஹேய்ய்ய்ய்..!!’ என்று கத்தியவாறு உடலை முறுக்கி உதறினான்.. அவனது உடும்புப்பிடியை சற்றே தளர்த்தினான்..!! ஆதிராவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. கணவனின் அணைப்பில் இருந்து அவசரமாய் நழுவி, கதவு திறந்து வெளியே ஓடினாள்..!! வெளியில் சென்று திரும்பி பார்த்து..
“யார்கிட்ட..??” என்று நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள். தொடர்ந்து..
“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!” என்று எளிறுகள் தெரிய சிரித்தாள்.
முகத்தில் வழிந்த நீரை இருகையாலும் துடைத்தெடுத்த சிபி.. கனைக்கிற மனைவியையே கடுப்புடன் பார்த்தான்..!! அசையாமல் நின்று, கொட்டுகிற ஷவரில் நனைந்தவாறே.. ஆதிராவை போலியாக எச்சரித்தான்..!!
“இளிக்கவா செய்ற..?? இன்னைக்கு நைட்டு எல்லாத்துக்கும் சேர்த்து இருக்குது..!!”
“ஹாஹா.. பாக்கலாம் பாக்கலாம்..!!”
சிரிப்புடனே சவால் விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஆதிரா.. மாடிப்படியேறி தங்களது அறைக்கு விரைந்தாள்..!! கணவனின் குறும்பை நினைத்து.. அவளது மனதுக்குள் ஒரு பூரிப்பு.. உதடுகளில் ஒரு வெட்கம் கலந்த புன்னகை..!!