ஆதிரா இப்போது அகல்விழி பற்றிய விஷயத்தை கணவனுக்கு உரைத்தாள்..!! இந்த செய்தி சிபிக்கு புதிதாக இருந்தது.. அத்தனை நேரம் முகிலன் பற்றி சொன்னபோதெல்லாம் இயல்பாக இருந்த அவனது முகத்தில்.. இப்போது எக்கச்சக்கமாய் ஒரு திகைப்பு.. ஆதிராவையே நம்பமுடியாத ஒரு பார்வை பார்த்தான்..!! அவனது தடுமாற்றம் அவனுடைய வார்த்தைகளிலும் வெளிப்பட்டது..!!
“அ..அகல்விழினா.. கொஞ்சம் மாநிறமா.. குள்ளமா.. ஸ்பெக்ஸ் போட்டுக்கிட்டு.. அந்தப் பொண்ணா..??”
“ஆமாம்.. அவளேதான்..!! அவளும் தாமிராவும் சேர்ந்துதான் அந்த ஆராய்ச்சியை ஆரம்பிச்சிருக்காங்க அத்தான்.. அப்புறம் என்னாச்சுனு தெரியல.. பாதிலேயே அந்த ஆராய்ச்சில இருந்து அகல்விழி விலகிருக்கா.. குறிஞ்சி பத்தின பயமா, இல்ல வேற யாராவது அவளை மெரட்னாங்களான்னு தெரியல..!!”
“ம்ம்..!!”
“அதுக்கப்புறம் தாமிரா மட்டுந்தான் தனியா அந்த ஆராய்ச்சியை கண்டின்யூ பண்ணிருக்கா..!! தாமிரா காணாமப்போன ரெண்டாவது மாசம்.. அந்த அகல்விழியும் காணாமப் போயிருக்கா..!!”
“ஓ..!!”
“Something’s wrong, definitely..!! உ..உங்களுக்கு என்ன அத்தான் தோணுது..??”
“என்ன தோணுதுனா..?? புரியல..!!”
“அந்த ஆராய்ச்சில இன்வால்வ் ஆகிருந்த ரெண்டு பேருமே இப்போ இல்ல.. ரெண்டு மாச கேப்ல, அடுத்தடுத்து மாயமா மறைஞ்சு போயிருக்காங்க.. அது உங்களுக்கு உறுத்தலா தெரியலையா..??”
“அவங்க ரெண்டு பேர் மட்டும் காணாம போகலையே.. லாஸ்ட் ஃபைவ் இயர்ஸ்ல.. அகழில அந்தமாதிரி இன்னும் நெறைய பேர் காணாம போயிருக்காங்களே..??”
“ம்ம்.. உண்மைதான்..!! நான் என்ன நெனைக்கிறேன்னா.. மத்தவங்க காணாம போனதுக்கு வேற ஏதாவது காரணமா இருக்கலாம்.. ஏன்.. குறிஞ்சியா கூட இருக்கலாம்..!! இவங்க காணாம போனதுக்கு இந்த ஆராய்ச்சி காரணமா இருக்கலாம்..!! அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி கெடைச்சா, என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாம்னு தோணுது..!! நீங்க என்ன நெனைக்கிறீங்க..??” ஆதிரா தீவிரமாக பேசிக்கொண்டிருக்க, சிபி அவளையே கவலையாக பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு,
“நீ தேவையில்லாம மனசை போட்டு கொழப்பிக்கிறன்னு நெனைக்கிறேன்..!!” என்றான் பட்டென.
“அத்தான்..”
“இங்க பாரு ஆதிரா.. தாமிரா எப்படியும் திரும்ப வரப்போறது இல்ல.. அவளுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கப்போய்.. நீ ஏதாவது சிக்கல்ல மாட்டிக்குவியோன்னு எனக்கு பயமா இருக்கு..!!”
“இ..இல்லத்தான்.. அப்படிலாம் எதுவும் ஆகாது..!!”
“என்னோட கவலைலாம் உன்னை நெனச்சுத்தான் ஆதிரா..!! இந்த இன்வெஸ்டிகேஷன்லாம் நமக்கு வேணாண்டா.. போலீஸ் இருக்காங்க.. அவங்க பாத்துப்பாங்க..!! அதுமில்லாம.. இப்போ உன் உடம்பும், மனசும் இருக்குற கண்டிஷன்க்கு இந்த மாதிரிலாம் நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுமா.. சொன்னா புரிஞ்சுக்கோ..!!” சிபியின் வார்த்தைகளில் தொனித்த அக்கறையும், கவலையும் ஆதிராவை சற்றே அடங்க வைத்தது.
“ம்ம்..!!” என்றாள் அமைதியாக.
“நீ இந்தமாதிரிலாம் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா.. சத்தியமா உன்னை அகழிக்கே கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன்..!!”
சிபி அவ்வாறு சலிப்பாக சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் அவனுடைய செல்ஃபோன் ஒலித்தது..!!
மனைவியின் முகத்தை மேலும் சில வினாடிகள் கவலையாக பார்த்தபிறகே.. ஒரு நீண்ட பெருமூச்சுடன் காலை பிக்கப் செய்தான் சிபி..!! கைபேசியை காதுக்கு கொடுத்து, இயல்பான குரலில் பேசினான்..!!
“ஹலோ.. சொல்லுங்க ஸார்..!!”
And indefinitely it is not far 🙂