மதன மோக ரூப சுந்தரி – 4 45

“ஏன் ஆதிரா இப்படி பண்ற..?? கண்டதையும் நெனச்சுக்கிட்டு..?? இப்பப்பாரு.. நிம்மதியா தூங்கக்கூட கஷ்டப்படுற..??”

“நான் என்னத்தான் பண்ணுவேன்..?? எனக்கு அதே நெனைப்பா இருக்கு..!!” ஆதிரா அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், சிபி இப்போது அவளை பாவமாக பார்த்தான்.

“சரி விடு.. தூங்கலாம் வா..!! காலைல திருவிழா.. சீக்கிரம் வேற எந்திரிக்கனும்..!!”

“ம்ம்.. ஆமாம்..!!”

“வா.. நெஞ்சுல சாஞ்சுக்கோ.. தட்டிக் குடுக்குறேன்.. நிம்மதியா தூங்கு..!!”

“ம்ம்..!!”

சிபி படுக்கையில் சரிந்துகொள்ள.. ஆதிரா அவனது மார்பில் படர்ந்துகொண்டாள்..!! மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சிபி.. அவளது வெற்று முதுகை பிசைந்து, இதமாக தடவிக் கொடுத்தான்.. அவளுடைய நெற்றியில் ஈரமாக ‘இச்’ பதித்தான்..!!

“மனசைப் போட்டு கொழப்பிக்காத ஆதிரா..!! இன்னும் ரெண்டு நாள்.. எதைப்பத்தியும் யோசிக்காம, ஜஸ்ட் திருவிழாவை மட்டும் செலிப்ரெட் பண்ணு..!! ரெண்டு நாள் முடிஞ்சதும்.. இந்த ஊரை காலிபண்ற வழியை பார்ப்போம்..!! புரியுதா..??”

“பு..புரியுதுத்தான்..!!”

“ம்ம்.. இப்போ சமத்தா தூங்கு..!! செல்லம்ல.. குட்டிப்புள்ளல..??”

ஒரு குழந்தையை உறங்க வைப்பதுபோல, கணவன் தனது முதுகை சுகமாக தட்டிக்கொடுக்க.. மூளையை ஆக்கிரமித்திருந்த குழப்ப நினைவுகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு.. அவனது மார்பிலேயே நிம்மதியாக உறங்கிப் போனாள் ஆதிரா..!!

அவள் உறங்குகிறவரை தானும் இமைமூடி படுத்திருந்த சிபி.. அவள் உறங்கிவிட்டாள் என்று உறுதியானபிறகு.. மெல்ல மெல்ல விழிகளை திறந்தான்..!! மனைவியின் உறக்கம் கலைக்காமல் அவளை மெத்தைக்கு மாற்றிவிட்டு.. இவன் படுக்கையில் இருந்து எழுந்துகொண்டான்.. அருகில் கிடந்த நாற்காலியில் மெல்ல அமர்ந்துகொண்டான்..!! இரவுவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த மனைவியின் முகத்தையே.. சலனமில்லாமல், கூர்மையாக, ஒரு வெறித்த பார்வை பார்த்தான்..!!

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.