மதன மோக ரூப சுந்தரி – 4 45

குளிரூட்டப்பட்ட அகலமான அறை அது.. மரத்தடுப்பால் இரண்டாக பிரித்திருந்தனர்..!! இவர்கள் இருவரையும் வெளியே அமரவைத்துவிட்டு.. சூபர்வைசர் மட்டும் உள்ளே சென்று முகிலனிடம் ஆதிராவின் வருகையை தெரிவித்தார்..!! சில வினாடிகளிலேயே முகிலன் அவனது பிரத்தியேக அறையில் இருந்து வெளிப்பட்டான்.. முகத்தில் ஒரு புன்னகையுடன்..

“வீட்டுக்கு வந்திருக்கலாம்ல ஆதிரா.. ஆபீசுக்கு வந்திருக்குற..??”

என்று இயல்பாகத்தான் வரவேற்றான்..!! பிறகு கதிரை கவனித்ததும்.. சட்டென சற்று முகம் சுருங்கியவன்..

“என்ன சாப்பிடுற..??” என்றபோது குரலில் ஒரு இறுக்கம்.

“இ..இல்ல.. ஒன்னும் வேணாம்..!!” ஆதிரா அவ்வாறு சொல்கையிலே ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்துகொண்டான்.

“என்ன மேட்டரு..??” என்று முறைப்பாக கேட்டான்.

வந்திருந்த விஷயத்தை தயங்கி தயங்கி ஆதிரா சொல்லிமுடிக்க.. முகத்தை உர்ரென வைத்தவாறே முகிலன் அதை கவனமாக கேட்டுக்கொண்டான்..!! அவ்வப்போது கதிரின் பக்கமாக திரும்பி அவனை எரித்து விடுவதுபோல பார்த்தான்..!! ஆதிரா பேசி முடித்தபிறகும்.. சிலவினாடிகள் எதுவும் பேசாமல் அவளுடைய முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! பிறகு.. கூலாக கேட்டான்..

“இப்போ என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு..??”

“தாமிராவுக்கு உங்களால எதும் ஆபத்து வந்ததான்னு தெரிஞ்சுக்கணும்..!!”

“ஹாஹா.. என்ன சொன்ன.. அவளுக்கு என்னால ஆபத்தா.. செம காமடி..!! அவளால இந்த ஊருக்கு வந்த ஆபத்தை சரி பண்றதுக்கு நான் இங்க தெனந்தெனம் முட்டி மோதிக்கிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா.. ஹாஹா..!!”

“என்ன சொல்றீங்க.. அவளால இந்த ஊருக்கு என்ன ஆபத்து வந்துச்சு..??”

“என்ன.. அதுவும் உனக்கு மறந்துடுச்சா..?? அஞ்சு வருஷம் முன்னாடி குறிஞ்சி வீட்டுக்குள்ள போய்.. தாமிரா அந்த தகட்டை வெளில எடுத்தது உனக்கு ஞாபகம் இல்ல..?? அம்பது வருஷத்துக்கு மேல குறிஞ்சி இந்த ஊர்ல அட்டகாசம் பண்ணிட்டு இருந்தா.. அதுக்கப்புறம் எங்கப்பா எடுத்துக்கிட்ட முயற்சியால அவ ஆவியை இருவது வருஷமா அடைச்சு வச்சிருந்தோம்.. இந்த ஊரும் நிம்மதியா இருந்துச்சு..!! இருவது வருஷமா இருந்த அந்த அமைதியை.. அஞ்சு வருஷம் முன்னாடி அஞ்சே நிமிஷத்துல உன் தங்கச்சி காலி பண்ணிட்டா..!! இப்போ.. திரும்பவும் குறிஞ்சி அவ ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா.. அஞ்சு வருஷத்துல எத்தனை பேர் காணாம போயிருக்காங்க தெரியுமா..?? அதுக்கெல்லாம் காரணம் யாரு..?? தாமிராதான்..!! மூடி வச்ச ஆவியை தெறந்து விட்டா.. அது அவளையே காவு வாங்கிடுச்சு..!!” முகிலனின் பேச்சு ஆதிராவுக்கு எரிச்சலை தந்தது.

“சும்மா இருங்கத்தான்.. தானா நடக்குறதுக்குலாம் தாமிரா மேல பழியை போடாதீங்க..!! அந்த இத்துப்போன தகட்டை வெளில எடுத்ததுக்கு.. இவ்வளவு பெரிய பேச்சுலாம் பேசாதிங்க..!! நீங்கவேணா இந்த மாந்திரிகம், பில்லி சூனியக் கருமாந்திரத்தலாம் நம்பலாம்.. கண்டகண்ட மந்திரவாதி பேச்சை கேட்டுக்கிட்டு கண்ணுமண்ணு தெரியாம ஆடலாம்.. இதெல்லாம் நான் நம்பமாட்டேன்..!! அந்த மந்திரவாதிக பேச்சை கேட்டு தாமிராவை ஏதாவது பண்ணிருப்பிங்களோன்னு கூட எனக்கு சந்தேகமா இருக்கு..!!” ஆத்திரத்தில் ஆதிரா அவ்வாறு ஆவேசமாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,

“கொழந்தை..!!”

என்று ஒருகுரல் அவளை இடையூறு செய்தது.. ஆதிரா உடனே தலையை திருப்பி குரல் வந்த திசையை பார்த்தாள்..!! முகிலனின் பிரத்தியேக அறை வாசலில் தாடி நீண்டிருந்த அந்த ஆள் நின்றுகொண்டிருந்தார்.. அகழி வந்த முதல்நாளன்று முகிலனின் வீட்டில் பூஜை நடத்திக் கொண்டிருந்த அதே ஆள்.. மாந்திரிகவாதி..!! அத்தனை நேரம் முகிலனின் அறைக்குள் அமர்ந்து வெளிப்பக்க பேச்சை கேட்டுக்கொண்டிருந்தவர்.. இப்போது வெளியே எழுந்து வந்திருந்தார்..!! அறைவாசலில் நின்று தலையை ஒருபக்கமாக சாய்த்து ஆதிராவையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்.. பிறகு மெல்ல நடந்து அவளை நெருங்கினார்..!!

“உன் பேர் என்னம்மா கொழந்தை..??” என்று கேட்டார்.

“…………………” ஆதிரா சற்றே திகைத்துப்போய் பேச்சு வராமல் நின்றிருந்தாள்.

“கேக்குறேன்ல.. சொல்லும்மா.. உன் பேர் என்ன..??”

“ஆ..ஆதிரா..!!” தடுமாற்றமாக சொன்னாள் ஆதிரா.

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.