மதன மோக ரூப சுந்தரி – 4 45

அகல்விழி பற்றிய சிந்தனையில் இருந்த ஆதிராவின் மனவோட்டம் திடீரென தடம்புரண்டது..!! அந்த ஆராய்ச்சியைப் பற்றி தனக்கு நினைவு வந்த செய்தியை சொல்லி.. நேற்றிரவு கணவனிடம் விவாதித்தது, இப்போது ஆதிராவின் மனதுக்குள் ஓடியது..!! அவளுடைய கேள்விக்கு, மிக இயல்பாக மறுமொழி கூறிக்கொண்டிருந்தான் சிபி..

“ஹ்ம்ம்.. ஆமாம்.. நல்லா ஞாபகம் இருக்கே.. குறிஞ்சி பத்தி ஏதோ ஆராய்ச்சி பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருந்தா.. எங்கிட்ட கூட அதை பப்ளிஷ் பண்றதுக்கு ஹெல்ப் கேட்டாளே.. நானும் கண்டிப்பா பண்றேன்னு சொல்லி வச்சிருந்தேன்..!! அதுவிஷயமா ஒருதடவை.. மைசூர்க்கு கூட தாமிரா வந்துட்டு போனா..!!”

“ஓ..!!”

“நாவரசு ஸாரை உனக்கு ஞாபகம் இருக்கா.. என்னோட பாஸ்..!! நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ உன்னை பாக்க வந்தாரே..??”

“ம்ம்.. ஞாபகம் இருக்குத்தான்..!!”

“ஹ்ம்.. தாமிரா மைசூர் வந்து அவரைத்தான் மீட் பண்ணினா.. அவளோட ஆராய்ச்சியை மக்கள்ட்ட கொண்டுபோய் சேக்குறது பத்தி பேசினா.. அவரும் ஹெல்ப் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணினாரு..!!”

“அ..அப்படினா.. அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி ஏதாவது.. தாமிரா அவர்ட்ட குடுத்திருக்க சான்ஸ் இருக்குல..??”

“இல்ல ஆதிரா.. அவ அப்படி எதும் அவர்ட்ட குடுக்கல.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. நானும் கூடவேதான் இருந்தேன்..!!” சிபி அவ்வாறு உறுதியாக சொல்லவும்,

“ப்ச்..!!”

ஆதிராவிடம் சட்டென ஒரு சலிப்பு.. அவளுடைய முகத்தில் அப்பட்டமாய் ஒரு ஏமாற்றம்..!! வாடிப்போன மனைவியின் முகத்தை பார்க்க பார்க்க.. சிபியின் மனதுக்குள் ஒரு கவலையூற்று சுரக்க ஆரம்பித்தது..!! சற்றே நகர்ந்து அவளை நெருங்கியவன்.. அவளது கன்னங்கள் இரண்டையும் கைகளால் தாங்கிப்பிடித்து.. கனிவு பொங்கும் குரலில் சொன்னான்..!!

“தேவை இல்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்காத ஆதிரா.. ப்ளீஸ்..!! தாமிரா காணாமப் போனதுக்கும் அந்த ஆராய்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது..!!”

“இல்லத்தான்.. எனக்கு அப்படி தோணல.. ஏதோ சம்பந்தம் இருக்குன்னு என் உள்மனசு சொல்லுது..!! கண்டிப்பா நாளைக்கு வேக்ஸின் ஃபேக்டரிக்கு போகத்தான் போறேன்..!!”

“இங்க பாரு ஆதிரா.. எனக்கு முகிலனை பிடிக்காதுதான்.. அவர் ரொம்ப ரஃப் அண்ட் டஃப் ஆளுதான்..!! அந்த ஆராய்ச்சி என்னவோ அவருக்கு பிடிக்காம போயிருக்கலாம்.. அதுக்காக.. தாமிராவுக்கு அவரால ஆபத்து வந்திருக்கும்னு என்னால கொஞ்சம் கூட நெனைச்சு பாக்க முடியல..!!”

“ப்ளீஸ்த்தான்.. என்னை நம்புங்க..!! என் முன்னாடியே அவளை கொலை பண்ணிடுவேன்னு மெரட்னார்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!! கோவம் வந்தா என்ன பண்றோம்னே தெரியாத அப்படி ஒரு மூர்க்ககுணம் முகிலனுக்கு.. நான் சந்தேகப்படுறதுல எந்த தப்பும் இருக்குறதா எனக்கு தோணல..!! நேர்லயே போய் கேட்டுட வேண்டியதுதான்.. என்ன சொல்றார்னு பாக்கலாம்..!!”

“ப்ச்.. இப்போ நீ போய் இதைப்பத்தி அவர்ட்ட பேசுறதால, தேவையில்லாத புதுப்பிரச்சினைதான் கெளம்பும் ஆதிரா..!!”

“என்ன பிரச்சினை வேணா வரட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!”

“ப்ச்.. சொல்றதையே புரிஞ்சுக்க மாட்டேன்ற நீ..!!”

“உங்களுக்குத்தான் நான் சொல்றது புரியல..!!”

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.