மதன மோக ரூப சுந்தரி – 4 44

“ஹேய்.. இது ஏதோ சும்மா கதை மாதிரி இருக்குடி.. நெஜம் மாதிரி தோணல.. நம்ம பாட்டனாரோட கற்பனையா கூட இருக்கலாம்..!!”

“ப்ச்.. இல்லக்கா.. உனக்கு புரியல..!! இந்தக்கதையையும் நெஜத்தையும் மேட்ச் பண்ணிப்பாரு.. உனக்கு க்ளியரா புரியும்..!! பேர்லாம் பாரு.. அகழியை முதலைப்பள்ளம்னு மாத்திருக்காரு.. குறிஞ்சியை குறவஞ்சின்னு மாத்திருக்காரு..!!”

“ம்ம்.. அது புரியுது..!!”

“இன்னொன்னு கவனி.. அந்த வில்லனோட பேரு புவனபதி.. அவர் பையன் பேரு தீர்த்தகிரி..!!”

“அதுல என்ன மேட்டர் இருக்கு..??”

“பேரை பாதி பாதியா கட் பண்ணி மிக்ஸ் பண்ணிருக்காருக்கா.. அவங்களோட உண்மையான பேரு புவனகிரி, தீர்த்தபதி..!! புவனகிரி யார்னு தெரியும்ல.. நம்ம பாட்டனாரோட தாத்தா.. சூழ்ச்சியோட முக்கியப்பங்கு அவருக்குத்தான்.. மீதிப்பங்கு அவரோட பையனுக்கு..!! அந்த ரெண்டு பேரோட முடிவு பத்தி கதைல என்ன எழுதிருக்குன்னு பாரு.. அந்த வில்லன் ஒரு பாழடைஞ்ச மண்டபத்துல ரத்தம் கக்கி செத்துப்போறான்.. பத்து பதினஞ்சு நாள் கழிச்சு அழுகிப்போய் அவர் உடலை கண்டு பிடிக்கிறாங்க..!! அவரோட பையன் எங்க போனான்னே தெரியாம.. ஒருநாள் திடீர்னு காணாம போயிர்றான்..!! நம்ம கொள்ளுப்பாட்டி.. நம்ம பரம்பரை பத்தி சொன்ன கதைல.. இதெல்லாம் சொல்லிருக்காங்க.. ஞாபகம் இருக்கா உனக்கு..??”

“ம்ம்ம்..!!”

“இப்போ புரியுதா..?? ஏதோ மனசாட்சி கேக்காமத்தான் அவர் இந்தக்கதையை எழுதிருக்காருக்கா.. ஆனா பயந்து பயந்து எழுதிருக்காரு.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு கவனமா எழுதிருக்காரு.. யார் கண்ணுலயும் இதை அவர் காட்டிருக்க மாட்டார்னு நெனைக்கிறேன்..!!”

“ம்ம்ம்..!!”

“இது மட்டும் இல்லக்கா.. இன்னும் நெறைய விஷயம் கலக்ட் பண்ணிட்டு இருக்குறேன்.. பண்ணப்போறேன்.. என்ன நடந்ததுன்னு தெள்ளத்தெளிவா ஆதாரத்தோட ஆராய்ச்சி கட்டுரையா ரிலீஸ் பண்ணப் போறேன்..!! குறிஞ்சியோட உண்மைக்கதை என்னன்னு.. நூறுவருஷம் கழிச்சு எல்லாருக்கும் தெரிய வைக்கப் போறேன்..!!” தாமிரா ஆவேசமாக பேசினாள்.

“ஆ..ஆனா.. இதுல நம்ம குடும்ப கௌரவம் அடங்கி இருக்கே தாமிரா..?? இந்தக்கட்டுரை வெளில வந்தா.. நம்ம குடும்பத்தை பத்தி எல்லாரும் தப்பா பேச மாட்டாங்களா..??” ஆதிரா தயங்கி தயங்கித்தான் கேட்டாள்.

தாமிரா கொஞ்சநேரம் அவளுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.. அமைதியாக இருந்தாள்.. பிறகு எங்கேயோ வெறித்து பார்த்துக்கொண்டு.. கூர்மையாக அந்தக் கேள்வியை கேட்டாள்..!!

“படிக்கிறப்போவே நெஞ்சு பதர்ற ஒரு கொடுமையை.. பணத்திமிர்ல சூழ்ச்சியா செஞ்சுமுடிச்ச ஒரு அக்கிரமத்தை.. ஒரு அப்பாவிப் பொண்ணை, ஒரு ஊரே சேர்ந்து கொளுத்தின கொடூரத்தை.. அந்த உண்மையை இத்தனை நாளா மூடிமறைச்ச அநியாயத்தை.. குடும்ப கௌரவம் பாத்துக்கிட்டு இன்னும் மூடிமறைக்க சொல்றியாக்கா..?? சொல்லுக்கா.. சொல்லு..!!”

தாமிராவின் கேள்வியில் ஆதிரா வாயடைத்துப் போனாள்.. பதில் பேச வார்த்தையற்றவளாய் தலையை குனிந்து கொண்டாள்..!!

பழைய நினைவுகளில் மூழ்கி திளைத்தவாறே.. தடுப்பூசி மருந்து தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தாள் ஆதிரா.. உள்ளே வர மறுத்த கதிரை கட்டயாப்படுத்தி அழைத்து சென்றாள்..!! ஆதிராவை அடையாளம் கண்டுகொண்ட தொழிலாளர்கள் அவளுக்கு வணக்கம் செய்தனர்.. எல்லோருக்கும் பதில் வணக்கம் செய்தவாறே உற்பத்திக் கூடத்திற்குள் நுழைந்தாள்..!! பணிவாக வணங்கிய சூபர்வைசரிடம் முகிலனை பார்க்கவேண்டும் என்றாள்.. அவர் உடனே இவர்களுக்கு முன்பாக விடுவிடுவென நடந்து, முகிலனின் அறைக்கு அழைத்து சென்றார்..!!

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.