மதன மோக ரூப சுந்தரி – 4 45

பேசிக்கொண்டே இருவரும் அந்த குகையை விட்டு வெளியே வந்தார்கள்.. மலைச்சரிவில் இறங்கி, கார் இருந்த திசையை நோக்கி மெல்ல நடந்தார்கள்..!! கதிர் சற்றே விரைவாக முன்னால் நடக்க.. ஏதோ ஒரு சிந்தனையுடன் ஆதிரா அவனுக்கு பின்னால் நடந்து கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் அவளுடைய செல்ஃபோன் கிணுகிணுத்தது..!!

ஆதிரா கைப்பை திறந்து செல்ஃபோனை வெளியே எடுத்தாள்.. ஏதோ அன்னோன் நம்பரில் இருந்து கால் வந்திருந்தது.. எதுவும் யோசிக்காமல் கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள்..!!

“ஹலோ..!!” என்றாள்.

“க்க்ர்ர்க்க்…க்க்கர்ர்ர்க்க்க்க்… க்க்கர்ர்ர்க்க்க்க்… க்க்ர்ர்க்க்…!!!!”

அடுத்தமுனையில் அந்த ஓசை.. எந்த மாதிரியான ஓசை என்றே புரிந்துகொள்ள முடியாத மாதிரியான ஒருவகை வினோத ஓசை..!!

“ஹலோ.. யாரு..??”

“க்க்ர்ர்க்க்… கண்… க்க்ர்ர்க்க்… க்க்கர்ர்ர்க்க்க்க்… ர்ர்ர்ர்ர்ர்ஈஈ..!!!!”

அந்த ஓசையை கேட்டு ஆதிரா இப்போது எரிச்சலானாள்..!!

“ஹலோ.. யாருன்னு கேக்குறேன்ல..?? யாரு வேணும் உங்களுக்கு..??”

என்று குரலை உயர்த்தி கத்தினாள்.. அவள் அவ்வாறு கத்தியதும், அடுத்த முனையில் இப்போது அந்த ஓசை கொஞ்சம் பிசிறில்லாமல் ஒலித்தது.. ஆதிராவும் சற்று காதை உன்னிப்பாக்கி கேட்க.. ஒலித்த வார்த்தைகள் அவளுடைய காதில் தெளிவாக வந்து விழுந்தன..!!

“க்க்க்க்கண்ணாமூச்சி.. ர்ர்ர்ர்ரே.. ர்ர்ர்ர்ரே..!!”

அவ்வளவுதான்..!!!! அந்த வார்த்தைகளை கேட்டு ஆதிரா அப்படியே அதிர்ந்து போனாள்..!! முகத்தில் எக்கச்சக்கமாய் ஒரு திகைப்பு கொப்பளிக்க.. அந்த செல்ஃபோனையே மிரட்சியாக பார்த்தாள்..!!

ஓரிரு வினாடிகள்..!! பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய்.. பதற்றத்துடன் செல்ஃபோனை இயக்கி கால் ஹிஸ்டரி எடுத்துப் பார்த்தாள்..!! அகழி வந்த முதல் நாளன்று.. அவளது செல்ஃபோனுக்கு வந்த அதே கரகர குரல் கால்.. அதே எண்ணில் இருந்துதான் இந்த காலும் வந்திருந்தது..!! யாராக இருக்கும் என்று குழப்பமாக நெற்றி தேய்க்க ஆரம்பித்தாள்..!!

அதற்குள்ளாகவே.. அவளது முகமாற்றத்தை கவனித்திருந்த கதிர்.. இப்போது அவளை நெருங்கியவாறே கேட்டான்..!!

“எ..என்னாச்சுங்க ஆதிரா..??”

“யா..யாரோ எனக்கு கால் பண்ணி விளையாடுறாங்க கதிர்..!!”

“யார் அது..??”

“யார்னு தெரியல.. ஸம் அன்னோன் நம்பர்..!!”

“ஓ.. என்ன விளையாடுறாங்க..??”

“எ..என்ன சொல்றாங்கன்னே புரியல.. கரகரன்னு ஒரே சத்தம்..!!”

“ம்ம்..!! நீங்க திரும்ப கால் பண்ணி பாத்திங்களா..??”

“இல்ல..!!”

“பண்ணி பாருங்க..!!”

ஆதிரா இப்போது அந்த எண்ணுக்கு திரும்ப டயல் செய்து பார்த்தாள்..!! ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்று பதில் வந்தது..!! அந்த பதிலில் ஆதிரா இன்னும் குழம்பிப் போனாள்..!!

“என்னாச்சுங்க..??” கதிர் ஆர்வமாய் கேட்டான்.

“இந்த நம்பர் இப்போ யூஸ்ல இல்லைன்னு வருது..!!”

“ஓ..!! எங்க.. அந்த நம்பரை கொஞ்சம் சொல்லுங்க..!!”

ஆதிரா சொல்ல சொல்ல.. கதிர் தனது செல்ஃபோனில் அந்த எண்ணை டைப் செய்து கொண்டான்.. டைப் செய்த வேகத்தில் அப்படியே டயல் செய்து பார்த்தான்..!! ஆதிராவுக்கு கிடைத்த அதே ரெஸ்பான்ஸ்தான் அவனுக்கும் கிடைத்தது.. அவனுமே குழம்பிப் போனான்..!!

“எனக்கும் அதேதான் சொல்லுது..!!”

சொல்லிவிட்டு காலை கட் செய்ய சென்ற கதிர்.. எதேச்சையாகத்தான் தனது செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்தான்.. பார்த்ததுமே பக்கென்று ஒரு அதிர்ச்சியை உள்வாங்கினான்.. கண்ணால் காண்பதை நம்ப முடியாமல், இமைகளை அகல விரித்து அந்த செல்ஃபோனையே உற்றுப்பார்த்தான்..!!

“என்னங்க ஆச்சு..??”

ஆதிரா கேட்க, கதிர் இப்போது தனது செல்ஃபோன் ஸ்க்ரீனை அவள்பக்கமாக திருப்பி காட்டினான்.. திக்கித் திக்கி திணறலாக சொன்னான்..!!

“நீ..நீங்க தந்த நம்பர்.. உ..உங்களோட ஓல்ட் நம்பர் ஆதிரா..!!”

இப்போது ஆதிராவும் அரண்டுபோய் அந்த செல்ஃபோனையே வெறித்தாள்..!!

“வாட்..????”

OLYMPUS DIGITAL CAMERA

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.