மதன மோக ரூப சுந்தரி – 4 45

“சரி.. அப்படியே குறிஞ்சிக்கு அந்த சக்தி இருக்குதுன்னு வச்சுக்கிட்டாலும்.. அவ ஏன் தாமிராவை தூக்கிட்டு போகணும்..?? இந்த ஊரே அந்த குறிஞ்சியை பத்தி கேவலமா சொல்லிட்டு இருந்தப்போ.. அவ நல்லவன்னு சொன்ன ஒரே ஆள் என் தங்கச்சி தாமிராதான்..!! அவ மேல குறிஞ்சிக்கு என்ன கோவம்.. அவளை ஏன் குறிஞ்சி தூக்கிட்டு போகணும்..??”

“ஹாஹா.. இப்படி கேட்டா நான் என்ன பதில் சொல்றது..??”

“ஏன் அங்கிள்..??”

“இதுதான் பேய், இப்படித்தான் ஆவிகள்’னு.. நம்மால அவ்வளவு ஈசியா எந்த முடிவுக்கும் வந்துட முடியாது..!! மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது ஆதிரா.. அதனாலத்தான் அதை அமானுஷ்ய சக்தின்னு சொல்றோம்..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. எப்படி நம்மா உறுதியா சொல்ல முடியும்..?? ஆவிகளோட நியாயம் அதுகளுக்குத்தான் புரியும்.. நாம புரிஞ்சுக்கணும்னு நெனைச்சா.. அது ரொம்ப கஷ்டம்..!!”

“ஹ்ம்ம்.. கொஞ்சம் புரியுது..!! அப்போ.. எல்லாத்துக்கும் காரணம் குறிஞ்சிதான்னு சொல்றிங்க..??”

“ஆமாம்மா.. அப்படித்தான் நான் நம்புறேன்.. குறிஞ்சிதான் எல்லாம் பண்ணிட்டு இருக்குறா..!!” என்று உறுதியான குரலில் சொன்ன செம்பியன் சற்றே நிறுத்தி,

“ஆனா…..” என்று இழுத்தார்.

“என்ன அங்கிள்..??”

“எனக்கு ஒரே ஒரு சின்ன உறுத்தல் மட்டுந்தான்..!!”

“என்ன உறுத்தல்..??”

“இந்த உறுத்தலை தாமிராட்ட சொன்னப்போ.. அவளுமே ‘அப்படியா’ன்னு ரொம்ப ஆச்சர்யமா கேட்டுக்கிட்டா..!!”

“என்னது அது.. சொல்லுங்க அங்கிள்..!!”

“எப்படி சொல்றதுனா.. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவங்க லிஸ்டையும்.. இப்போ அஞ்சு வருஷமா காணாம போனவங்க லிஸ்டையும்.. ஒண்ணா வச்சு கம்பேர் பண்ணி பாத்தோம்னா.. ஒரு விஷயம் ரொம்ப உறுத்தலா இருக்கு..!!”

“எது..??”

“இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவங்கள்ல.. எல்லா டைப்பும் இருந்தாங்க.. பொறந்த கொழந்தைங்க.. திடமான ஆம்பளைங்க.. வயசான கெழடுங்க.. எல்லாரும் அதுல அடக்கம்..!! ஆனா.. போன அஞ்சு வருஷமா காணாம போனவங்களை பாத்தோம்னா.. மொத்தம் பதினெட்டுப் பேரு.. அத்தனை பேரும் கன்னிப்பொண்ணுங்க, இல்லனா ஹவுஸ்வொய்ஃப்ங்க..!!”

செம்பியன் இயல்பாக சொல்லிக்கொண்டிருக்க, ஆதிராவும் கதிரும் அப்படியே திகைத்துப் போய் அவரை பார்த்தார்கள்..!!

அதன்பிறகும் சிறிது நேரம் அவருடன் பேசி இருந்துவிட்டு.. ஆதிராவும் கதிரும் அங்கிருந்து கிளம்பினார்கள்..!! தேடிவந்த விஷயத்தில் தெளிவேதும் பிறக்கவில்லை.. கூடக்கொஞ்சம் மனதுக்குள் குழப்பமே அதிகரித்திருந்தது..!!

“செம்பியன் அங்கிள் ரொம்ப கொழப்பிட்டாரு..!!” ஆதிரா சொன்னாள்.

“ம்ம்.. என்னையுந்தான்..!! இத்தனை நாளா இந்த ஆங்கிள்ல யோசிக்கவே இல்லைன்னு நெனைக்கிறப்போ.. ரொம்பவே கேவலமா இருக்கு..!!”

“எனக்கும் இப்போ புதுசு புதுசா என்னன்னவோ தோணுது..!!”

“என்ன தோணுது..??”

“குறிஞ்சியை பத்தி ஆராய்ச்சி பண்ண போறேன்னு சொல்லிட்டு.. இந்த ரெண்டு பொண்ணுகளும் புதுசா எதையோ கண்டு பிடிச்சிடுச்சுங்களோ.. அதனால ஏதாவது ஆபத்தோன்னு தோணுது..!!”

“அல்ரெடி எனக்கும் அந்த டவுட் வந்துடுச்சு..!!!”

“ம்ம்..!!”

“ஹ்ம்ம்..!! அடுத்து எங்க ஆதிரா..?? வீட்டுக்கா.. இல்ல வேற எங்கயும் போகனுமா..??”

“சிங்கமலை வரை போயிட்டு வீட்டுக்கு போலாமா..??”

“சிங்கமலைக்கா.. அங்க எதுக்கு..??”

“காலைல தாமிரா வரைஞ்ச ஒரு ஓவியத்தை பார்த்தேன் கதிர்..!! அதே மாதிரி ஓவியத்தை சிங்கமலைல நான் பாத்திருக்குறேன்.. இப்போ அதை திரும்ப பாக்கணும் போல இருக்கு..!! புதுசா ஏதாவது ஞாபகம் வருதா பாக்கலாம்..!!”

“ஓ..!! சரிங்க.. போலாம்..!!”

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இருவரும் காரில் கிளம்பினார்கள்.. சிங்கமலையை நோக்கி பயணித்தார்கள்..!! சிங்கமலையின் உச்சி வரைக்கும் காரில் செல்ல முடியாது.. ஒரு கி.மீ தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு, இருவரும் நடந்தேதான் சிங்கமலை உச்சியை அடைந்தார்கள்..!!

சிங்கமலையில்.. சிங்கமுக சிலைக்கு பக்கவாட்டில்.. மலையை குடைந்து உருவாக்கப் பட்டிருந்தது அந்த குகை.. மதியநேரத்தில் கூட சுத்தமாக வெளிச்சமற்றுப் போய் காட்சியளித்தது..!! கையோடு எடுத்து வந்திருந்த டார்ச்லைட்டின் வெளிச்சத்திலேதான்.. குகைச்சுவர்களில் வரையப்பட்டிருந்த அந்த உளிச்சித்திரங்களை.. ஆதிரா கதிருக்கு காட்டினாள்..!!

குறிஞ்சியின் வாழ்க்கை நிகழ்வுகளை குறிப்பால் உணர்த்துவதுபோல பொறிக்கப்பட்ட சித்திரங்கள்..!! கல்யாணமாகி கணவனுடன் அகழிக்கு வருகிற குறிஞ்சி.. அவர்களது தாம்பத்யம், இல்வாழ்க்கை.. கணவனின் பிரிவு.. புவனகிரியின் ஆக்கிரமிப்பு.. தீர்த்தபதியின் நட்பு.. ஊர்க்கூட்டம்.. தாமிரா வரைந்து வைத்திருந்த அதேவகை சித்திரம்.. தீப்பற்றி எரிகிற உடலுடன் ஆற்றில் குதிக்கிற குறிஞ்சி..!! முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தன..!!

அவற்றை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவின் முன்பாக.. திடீரென தாமிரா தோன்றினாள்.. ஒருவருடம் முன்பாக அக்காவுக்கு உரைத்ததையே இப்போதும் உரைத்தாள்..!!

“நல்லா பாரு.. நான் சொன்னப்ப நம்பலைல.. பாரு இதெல்லாம்..!! நானா இதெல்லாம் வரைஞ்சேன்..?? யாரோ விஷயம் தெரிஞ்சவங்கதான் இதெல்லாம் வரைஞ்சிருக்காங்க.. நம்ம பாட்டனார் எழுதி வச்சதோடவும், நான் சொன்னதோடவும் எவ்வளவு கரெக்டா மேட்ச் ஆகுது பாரு..!! நான்தான் சொன்னேன்ல.. குறிஞ்சி ரொம்ப அப்பாவிக்கா.. நல்லவ..!!” அக்காவிடம் சொல்லிக்கொண்டே, கையிலிருந்த கேமராவால் அந்த சித்திரங்களை, புகைப்படச் சுருளுக்குள் சிறைபிடித்தாள் தாமிரா..!!

“இத்தனை வருஷமா இந்த ஊர்ல இருந்திருக்கேன்.. இதெல்லாம் என் கண்ணுலேயே பட்டதே இல்ல ஆதிரா..!!” கதிர் திடீரென பேசி ஆதிராவை நனவுக்கு கொண்டுவந்தான்.

“ஹ்ம்ம்.. உங்களுக்கு மட்டும் இல்ல கதிர்.. இந்த ஊர்ல யார் கண்ணுக்குமே இதெல்லாம் தெரியல.. எனக்கும் சேர்த்துதான் சொல்றேன்..!! தாமிரா ஒருத்திக்குத்தான் எல்லாம் தெரிஞ்சிருக்கு..!!”

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.