மதன மோக ரூப சுந்தரி – 4 45

அந்த ஆராய்ச்சி விவகாரம் இப்போ அமுங்கி போயிருக்குறதுல எனக்கு சந்தோஷம்தான்.. தாமிரா போனப்புறம் அந்த பழைய டைரியை தீ வச்சு கொளுத்தினதும் நான்தான்..!! ஆனா.. தாமிரா காணாமப் போனதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! இதுக்கு மேலயும் உனக்கு நம்பிக்கை இல்லன்னா.. போலீஸ்ல கம்ளயின்ட் பண்ணு.. கேஸ் போடு.. நான் பாத்துக்குறேன்.. சரியா..?? இப்போ எடத்தை காலி பண்ணு..!!” என்று வெறுப்பாக சொன்னான்.

அதற்குமேலும் வாக்குவாதத்தை வளர்க்க விரும்பாதவளாய் ஆதிரா அங்கிருந்து கிளம்பினாள்.. அவளுடன் கதிரும்..!! உற்பத்திக் கூடத்திற்குள் நுழைந்து.. தொழிற்சாலையின் வாயிற்கதவை நோக்கி நடந்தனர்..!!

“நான்தான் சொன்னேன்ல.. இவங்கட்ட பேசிலாம் எந்த பிரயோஜனமும் இல்லங்க ஆதிரா..!! நம்ம கைல ஸ்ட்ராங் பாயின்ட் இல்லாதவரை.. எல்லாமே வேஸ்ட்..!!” கதிர் முணுமுணுப்பாக சொன்னதை,

“ம்ம்..!!” ஆதிரா அமைதியாக ஆமோதித்தாள்.

தொழிற்சாலையை விட்டு வெளியேறி.. இருவரும் மீண்டும் ஜீப்பில் பயணித்தார்கள்..!! கதிர் கவனமாக காரோட்ட.. ஆதிரா ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.. முகிலன் மற்றும் மாந்திரிகவாதியின் பேச்சில் அவள் சற்றே ஆடிப் போயிருந்தாலும்.. முழு சமாதானம் ஆகவில்லை.. முகிலன் மீது அவளுக்கிருந்த சந்தேகத்தை முற்றிலுமாக விலக்கிக்கொள்ள முடியவில்லை..!!

திடீரெனத்தான் அவளுக்கு அந்த மெமரி சிப் பற்றிய ஞாபகம் வந்தது.. அதை அவ்வளவு பத்திரமாக தாமிரா பதுக்கியிருக்கிறாள் என்றால்.. அவளுடைய ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் நிச்சயம் அந்த மெமரி சிப்புக்குள் அடங்கியிருக்கவேண்டும் என்று தோன்றியது..!! உடனே.. அந்த மெமரி சிப் பற்றி கதிரிடம் தெரிவித்தாள்.. எந்த மாதிரி சூழ்நிலையில் அது தனது கைக்கு கிட்டியது என்று விளக்கினாள்.. அதைக்கேட்டு அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிக்கையிலேயே..

“அது என்ன பாஸ்வேர்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா கதிர்..??” என்று கேட்டாள்.

“இ..இல்லைங்க.. எனக்கு தெரியாது.. ஏன் கேக்குறீங்க..??”

“தாமிரா ஒருவேளை உங்கட்ட சொல்லிருக்கலாமோன்னு நெனைச்சேன்..!!”

“இ..இல்ல.. சொன்னது இல்ல..!!”

“ஹ்ம்ம்.. எனக்கு என்னவோ.. தாமிரா காணாமப் போனதுக்கும், அந்த மெமரி சிப்புக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிரி தோணுது கதிர்..!! அந்த பாஸ்வேர்ட் என்னன்னு தெரிஞ்சா ஈஸியா இருக்கும்.. அட்லீஸ்ட்.. அவளோட ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி எதாவது கெடைச்சா கூட நல்லது..!!”

“ம்ம்ம்ம்ம்ம்… எனக்கு ஒரு ஐடியா தோணுது.. சொல்லவா..??”

“சொல்லுங்க..!!”

“தாமிராவும் அவ ஃப்ரண்ட் இன்னொரு பொண்ணு.. பேர் என்னவோ.. கயல்விழியோ மலர்விழியோ..”

“அகல்விழி..??”

“யெஸ்ஸ்.. அகல்விழி..!! அவங்க ரெண்டு பேருந்தான் அந்த ஆராய்ச்சியை சேர்ந்து செஞ்சாங்க..!!”

“ஓ.. அப்படியா..??” ஆதிரா ஆச்சர்யமாக கேட்டாள்.

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.