மதன மோக ரூப சுந்தரி – 4 44

“ஹ்ம்ம்.. ஆதிரா.. நல்ல பேர்.. கண்ணகிக்கு நிகரான கற்புக்கரசி.. புருஷன் உசுரை காப்பாத்த தீயில பாஞ்சவ.. சரியா..??”

“…………………”

“ஆதிராக்கண்ணு தப்பா எடுத்துக்கலைனா நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா..??”

“சொ..சொல்லுங்க..!!”

“நமக்கு புரியலைன்றதுக்காக ஒரு விஷயத்தை பத்தி தப்பா சொல்றது.. ரொம்ப ரொம்ப தப்பு..!!”

“…………………”

“மனுஷங்கள்ல நல்லவங்க கெட்டவங்க இருக்குற மாதிரிதான்.. மாந்திரிகத்துலயும் நல்லது கெட்டது இருக்குது..!! அதுக்காக மாந்திரிகமே வேணான்னு சொல்லிடுறதா..?? மனுஷங்களே வேணாம்னு உலகத்தை அழிச்சுடலாமா..?? ம்ம்..??” கேட்டுவிட்டு அவர் புன்னகைக்க,

“…………………” ஆதிராவால் பதில் பேச முடியவில்லை.

“மாந்திரிகம்னாலே கெட்டதுன்னு இல்ல.. என்னை பாத்தா கெட்டவன் மாதிரியா இருக்கு உனக்கு..?? நாப்பது வருஷமா மாந்திரிகம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. இதுவரை கெட்ட சக்திக்குத்தான் என்னால கெடுதல் வந்திருக்கே ஒழிய.. நல்லவங்க யாருக்கும் எந்த கெடுதலும் வந்தது இல்ல..!!”

“…………………”

“ரிக், யஜூர், சாமம், அதர்வணம்னு.. நாலு வகையான வேதம் கேள்விப் பட்ருக்கியா..?? அதுல அதர்வணம் என்னன்னு தெரியுமா..?? முழுக்க முழுக்க மாந்திரிகம்..!! நம்ம முன்னோர்ங்க நாலு வேதத்துல ஒண்ணா வச்சு மரியாதை செஞ்ச மாந்திரிகத்தை.. இந்த காலத்து புள்ளைங்க இவ்வளவு கேவலமா நெனைச்சுட்டு இருக்கீங்க.. என்னத்த சொல்றது..??”

“…………………”

“மாந்திரிகம்னா.. எலுமிச்சைல குங்குமத்தை கரைச்சு.. ஏதோ ‘ஓம் க்ரீம்’ன்னு மந்திரம் சொல்றது இல்ல..!! மாந்திரிகம் ஒரு சயின்ஸ்.. யந்திரம் எழுதுறது ஒரு எஞ்சினியரிங்..!! அம்பது வருஷமா இந்த ஊர்ல மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இருபத்தஞ்சு வருஷம் முன்னாடி என் அப்பாவும், முகிலன் அப்பாவும் சேர்ந்து அந்த யந்திரம் வைக்கிறாங்க.. அதுக்கப்புறம் இருவது வருஷமா எந்த பிரச்சினையும் இல்ல.. உன் தங்கச்சி அந்த தகட்டை எடுத்தப்புறம் திரும்ப அந்த மாதிரி மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இதுக்கு என்ன விளக்கம் சொல்லப் போற..??”

“…………………”

“சில அமானுஷ்ய சக்திகளை புரிஞ்சுக்குறதுக்கும், அடக்கி வைக்கிறதுக்கும் அதுக்கு நிகரான இன்னொரு அமானுஷ்ய சக்தியாலதான் முடியும்.. அதைத்தான் நாங்க மாந்திரிகம்னு சொல்றோம்..!! அதுக்கும் நேரம், காலம், சமயோசிதம் எல்லாம் இருக்கு.. பல்லு விளக்குறது, பாக்கு போடுறது மாதிரி ஈசியான காரியம் இல்ல..!! என் அப்பாவும், முகிலன் அப்பாவும் முன்னாடி செஞ்சுட்டு இருந்ததை.. இப்போ நானும் முகிலனும் செஞ்சுட்டு இருக்கோம்.. அந்த குறிஞ்சியோட ஆவியை அடக்கி வைக்க முயற்சி செய்றோம்..!! இதுக்காக முகிலன் எவ்வளவு செலவு செய்றார் தெரியுமா..?? இதையெல்லாம் அவர் அவரோட குடும்பத்துக்காக மட்டும் செய்யல.. இந்த ஊரோட நல்லதுக்காக செய்றார்..!! இப்படிப்பட்ட நல்லவர் மேல.. இப்படி ஒரு பழியை போடலாமா கொழந்தை..??”

அந்த மாந்திரிகவாதி சாந்தமாக கேட்டுவிட்டு புன்னகைக்க.. ஆதிராவுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை..!! அதற்குள்ளாகவே முகிலன் இடையில் புகுந்து பேசினான்..!!

“விடுங்க சாமி.. இவளுக்கு இதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது..!! யார் சொல்லி இவ இதெல்லாம் பண்றான்னு எனக்கு தெரியும்..!!” என்றவன், பக்கவாட்டில் திரும்பி கதிரை ஒரு முறை முறைத்துவிட்டு தொடர்ந்தான்..!!

“இங்கபாரு.. தாமிராவை கொன்னுருவேன்னு நான் மிரட்டுனது உண்மைதான்.. எப்படியாவது அந்த ஆராய்ச்சி கட்டுரை வெளில வராம தடுக்கணும்னு நான் நெனச்சதும் உண்மைதான்..!! குறிஞ்சிக்கு நியாயம் கெடைக்கிறதுலாம் எனக்கு முக்கியம் இல்ல.. குடும்பமானம்தான் எனக்கு முக்கியம்.. அதுக்காக என்னவேனாலும் செய்வேன்..!!

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.