மதன மோக ரூப சுந்தரி – 4 45

வீட்டுக்குள் நுழைந்த ஆதிரா, அயர்ந்துபோய் தொப்பென்று சோபாவில் விழுந்தாள்.. அத்தனை நேரம் அவளை நெருக்கிய குழப்ப அழுத்தத்தில் இருந்து மீளமுடியாமல், அப்படியே கண்களை இறுக்கிக் கொண்டு கிடந்தாள்..!!

“என்னாச்சு ஆதிராம்மா..?? உடம்பு கிடம்பு சரியில்லையா..??” என்று கனிவாக கேட்ட வனக்கொடிக்கு கூட,

“ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்லமா.. லேசா தலைவலி..!!” என தடுமாற்றமாகவே பதில் சொன்னாள்.

“சாப்பாடு ரெடிமா..!! சாப்பிடுறியா..??”

“இ..இல்லம்மா.. கொஞ்ச நேரம் ஆகட்டும்..!!”

தனது கைபேசிக்கு வருகிற அந்த மர்மமான அழைப்பைப்பற்றி.. உடனடியாய் தனது கணவனிடம் தெரிவிக்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு.. ஊட்டியிலிருக்கும் அவனுக்கு கால் செய்து பேசிவிடலாமா என்று கூட ஒருகணம் நினைத்தாள்..!! பிறகு.. அலுவலக வேலை நிமித்தமாக சென்றிருக்கும் அவனுக்குள்.. தனது அழுத்தத்தை இட்டு நிரப்பவேண்டாமே என்று தோன்றவும்.. அந்த யோசனையை கைவிட்டாள்..!!

அன்றிரவு.. தான் குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சிபி..!! அவனுடைய வருகைக்காகத்தான் காத்திருந்த ஆதிரா.. அவன் வந்ததுமே ஓடோடிச்சென்று அந்த விஷயத்தை அவனுக்கு உரைத்தாள்.. அவனுடைய வார்த்தையை மீறி கதிருடன் சுற்றியதை மட்டும் தவிர்த்துவிட்டு, அந்த மர்ம அழைப்பைப்பற்றி மட்டும் சொன்னாள்..!!

மனைவி சொல்வதை கவனமாக கேட்டுக்கொண்டே வந்த சிபி.. கொஞ்சம் கொஞ்சமாய் முகம் மாறினான்.. திகைப்பும், குழப்பமும் கலந்துகட்டி வழிந்தது அவனது முகத்தில்..!! ‘எப்படி இது சாத்தியம்?’ என்பது போல நெற்றியைப்பற்றி பிசைந்துகொண்டான்.. எங்கேயோ ஒரு வெறித்த பார்வை பார்த்தான்..!!

குழப்பத்தில் தத்தளித்த கணவனிடம், ஆதிரா இப்போது கவலையாக கேட்டாள்..!!

“அந்த மொபைல் நம்பரை ட்ரேஸ் பண்ணனும் அத்தான்.. யாராவது அந்த நம்பரை யூஸ் பண்ணிட்டு இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கணும்.. முடியுமா..??”

“ம்ம்.. நாவரசு ஸார்ட்ட வேணா ஹெல்ப் கேட்டுப் பாக்கலாம் ஆதிரா..!! தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மன்ட்ல அவருக்கு கொஞ்சம் இன்ஃப்ளூயன்ஸ் இருக்கு..!!”

“ஓ..!! அப்போ அவர்ட்ட பேசுறிங்களா..??”

“இ..இப்போவேவா..??”

“ம்ம்.. இப்போவேதான்..!!”

“அன்-டைமா இருக்கேன்னு பார்த்தேன்..!!”

“என்ன மேட்டர்னு எனக்கு உடனே தெரிஞ்சாகனும்.. ப்ளீஸ்த்தான்..!!!”

மனைவியின் கெஞ்சலில் இருந்து தப்பமுடியாமல்.. அவ்வளவாக விருப்பம் இல்லாமலேயே, அந்த அசௌகரியமான நேரத்தில் தனது முதலாளியை கைபேசியில் அழைத்தான் சிபி..!! விஷயத்தை சுருக்கமாக சொல்லி அவரது உதவியை கேட்டான்.. அவரும் உடனடியாய் செய்வதாக உறுதியளித்தார்..!!

இரவு உணவு அருந்தி முடித்து இருவரும் படுக்கையில் வீழ்ந்த சமயத்தில்.. சிபியின் செல்ஃபோன் அதிர்வுற்று ‘க்க்க்ர்ர்ர்ர்ர்ர்… க்க்க்ர்ர்ர்ர்ர்ர்…’ என்று ஓசையெழுப்பியது..!! அறைக்குள் சிக்னல் கிடைக்காமல் செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான் சிபி.. ஐந்து நிமிடங்கள் கழித்தே அறைக்கு மீண்டும் திரும்பினான்..!! அவனுக்காக காத்திருந்த ஆதிரா இப்போது ஆர்வமாக கேட்டாள்..!!

“யாருத்தான் ஃபோன்ல..??”

“நாவரசு ஸார்தான்..!!”

“ஓ..!! என்ன சொன்னாரு..??”

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.