மதன மோக ரூப சுந்தரி – 4 44

“நம்ம விஷயமா போலீஸ்ட்ட ஹெல்ப் கேட்ருக்காரு.. அவங்களும் இனிஷியலா சில இன்ஃபர்மேஷன்ஸ் குடுத்திருக்காங்க..!!”

“எ..என்ன அது..??”

“அந்த மொபைல் நம்பரோட லாஸ்ட் ஆக்டிவிட்டி அகழியைத்தான் பாயிண்ட் பண்ணுது ஆதிரா.. பட்.. ஒருவருஷத்துக்கு முன்னாடி..!! லாஸ்ட் ஒன் இயரா அந்த மொபைல் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆகித்தான் இருக்குதாம்.. யாருமே யூஸ் பண்ணலைன்னு சொல்லிருக்காங்க..!!” சிபி சொல்ல, ஆதிரா திகைப்பாக புருவத்தை நெறித்தாள்.

“அ..அப்புறம்.. அப்புறம் எப்படி என் மொபைல்க்கு அந்த நம்பர்ல இருந்து கால் வருது..??”

“ம்ம்.. நாவரசு ஸார் இது பத்தி அவங்கட்ட கேட்ருக்காரு.. அவங்களும் டீடெயிலா ட்ரேஸ் பண்ணனும்னு சொல்லி, இன்னும் ரெண்டு நாள் டைம் கேட்ருக்காங்க..!!”

“ஓ..!!”

“ஸோ.. ரெண்டு நாள் வெயிட் பண்ணலாம் ஆதிரா.. என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்..!! இப்போதைக்கு இதை ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.. சரியா..??” சிபி அவ்வாறு அமர்த்தலாக சொல்ல,

“ம்ம்.. சரித்தான்..!!” ஆதிரா திருப்தியில்லாமலே தலையசைத்தாள்.

அன்றிரவு கணவனுடன் உறவில் ஈடுபட்ட போதிலும்.. ஆதிராவால் கவனத்துடன் ஈடுபட முடியவில்லை..!! உறவு தந்த களைப்பு உடலில் நிறைந்திருந்தபோதிலும்.. உறக்கம் வராமல் நீண்ட நேரம் நெளிந்துகொண்டு கிடந்தாள்..!! ஏதேதோ குழப்ப நினைவுகள்.. என்னென்னவோ சீரற்ற சிந்தனைகள்.. அவஸ்தையாக அப்படியும் இப்படியும் புரண்டுபுரண்டு படுத்தாள்..!! ஒருமணிக்கு அப்புறம் ஒருவழியாக கண்கள் அயர்ந்தபோதுதான்.. அவளுக்கு அந்த கனவு வந்தது.. நிஜத்தில் நடப்பதுபோல் அவள் மனக்கண்ணில் அந்தக்காட்சி..!!

அடர்ந்து இருண்ட காடு அது.. அந்தி சாய்கிற சமயம் அது..!! சுற்றுச்சூழலில் எக்கச்சக்கமாய் மாலைநேரத்து பனிப்பொழிவு.. காற்றில் மிதக்கிற பனித்துகள்கள் கூட கண்களுக்கு தெளிவாக புலப்பட்டன..!!

அகன்ற அடிப்புறம் கொண்ட மரமொன்றில்.. எட்டு வயது ஆதிரா நெற்றியை சாய்த்திருந்தாள்..!! அவளது கண்கள் ஒரு சிவப்புநிற துணியால் கட்டப்பட்டிருந்தன.. அவளுடைய உதடுகள் அந்தப்பாடலை உச்சரித்தன.. அவள் உச்சரித்த அந்த வார்த்தைகள் அவளுக்கே தெளிவில்லாமல்தான் காதில்வந்து விழுந்தன..!!

“கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!”

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!!”

ஆறு வயது தாமிரா பச்சரிசிப்பற்கள் பளபளக்க சிரித்தவாறே.. அக்காவின் முதுகை தொட்டுவிட்டு ஓட்டமெடுத்தாள்..!! தரையில் முளைத்திருந்த புல்வெளியில்.. தனது தளிர்ப்பாதங்களை பதித்து பதித்து.. ஸ்லோமோஷனில் தூரமாக ஓடிக்கொண்டே இருந்தாள்..!! மரத்தின் பக்கமாக திரும்பி நின்றிருந்த ஆதிராவோ.. தொலைதூரம் தங்கை செல்வதை அறியாமல்.. தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தாள்..!!

“கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு..
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா..!!”

தலைதிருப்பிய ஆதிரா இப்போது தங்கையை தேட ஆரம்பித்தாள்..!! கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்க.. காற்றில் பறக்கிற பனித்துகள்களுக்குள்.. கைவிரல்களை அசைத்து அசைத்து தேடினாள்..!! விரித்துவைத்த கைகளுடன்.. அங்குமிங்கும் நகர்ந்து தங்கையை தேடியவாறே.. அந்தப்பாடலை விடாமல் மழலைக்குரலில் பாடினாள்..!!

“கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!”

நீண்ட நேரமாக தாமிரா தட்டுப்படவில்லை.. அலைந்து அலைந்து ஆதிராவின் கைவிரல்கள் அயர்ச்சி கண்டதுதான் மிச்சம்..!! நேரம் ஆக ஆக.. அவளது நெஞ்சுக்குழிக்குள் பயம் கொப்பளிக்க ஆரம்பித்தது.. தங்கை என்ன ஆனாளோ என்கிற பயம்..!!
கண்களை கட்டியிருந்த துணியை.. படக்கென அவிழ்த்து கையிலெடுத்தாள் ஆதிரா..!! அத்துவான காட்டுக்குள்.. ஒத்தையாய் நின்று.. சத்தம்போட்டு கத்தினாள்..!!

“தாமிராஆஆஆஆ..!!!!!”

தங்கை சென்றிருக்க வாய்ப்பிருக்கிற திசையென.. உத்தேசமாய் ஒருதிசையை முடிவு செய்துகொண்டு.. அந்தத்திசையிலேயே தொண்டைகிழிய அலறிக்கொண்டு ஓடினாள்..!!

“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!”

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.